Categories
Uncategorized ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

நாளைய ( 29.02.2020 ) நாள் எப்படி இருக்கு ? ராசி பலன் இதோ ….!!

இன்றைய  பஞ்சாங்கம்

29-02-2020, மாசி 17, சனிக்கிழமை,

பஞ்சமி காலை 09.09 வரை பின்பு வளர்பிறை சஷ்டி.

நாள் முழுவதும் பரணி நட்சத்திரம்

நாள் முழுவதும் சித்தயோகம்.

நேத்திரம் – 1. ஜீவன் – 1/2.

சஷ்டி.

முருக வழிபாடு நல்லது.

கரி நாள்.

சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் – காலை 09.00-10.30,

எம கண்டம் மதியம் 01.30-03.00,

குளிகன் காலை 06.00-07.30,

சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

மேஷம்

இன்று பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் கணவன்& மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். இதுவரை இருந்த கடன் பிரச்சினைகள் தீரும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார ரீதியான வெளிவட்டார நட்பு கிட்டும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட காலதாமதமாகும். தேவையில்லாத செலவுகளால் கையிருப்பு குறையும். பணபற்றாக்குறையை சமாளிக்க சிக்கனத்தை கடைப்பிடிப்பது நல்லது. அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகளால் தொழிலில் பல புதிய மாற்றங்கள் உண்டாகும்.

மிதுனம்

இன்று நீங்கள் எந்த செயலையும் மன தைரியத்தோடு செய்து முடிப்பீர்கள். உங்களின் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும்.

கடகம்

இன்று நீங்கள் உற்சாகத்துடனும் சுறுசுறுப்புடனும் செயல்படுவீர்கள். நண்பர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பெறும். உடன்பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றியை கொடுக்கும். சுபகாரிய நிகழ்ச்சிகள் கூடி வரும்.

சிம்மம்

இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறிய பிரச்சினைகள் வந்து அகலும் நிலத்தில் நிம்மதியற்ற சூழல் உருவாகும். உடன்பிறந்தவர்களால் மன வருத்தங்கள் ஏற்ப்படும். வியாபாரத்தில் பணியாட்களை அனுசரித்து செல்வதால் முன்னேற்றத்தை காணலாம். தெய்வீக ஈடுபாடு நன்மையை கொடுக்கும்.

கன்னி

இன்று நீங்கள் மிகுந்த மன வருத்தத்துடன் காணப்படுவீர்கள் அடுத்தவர்களிடம் தேவையில்லாமல் கோபம் சூழல் ஏற்படும். இன்று உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் நிலைப்பதால் அமைதி காப்பது நன்மை கொடுக்கும். அடுத்தவர்களிடம் கடன் வாங்குவதையும் அடுத்தவர்களுக்கு கடன் கொடுப்பதை தவிர்க்கவும்.

துலாம்

இன்று இல்லத்தில் சுபச் செய்திகள் வந்து சேரும் மகிழ்ச்சி கொடுக்க கூடிய சூழல் உருவாகும் பெரியவர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும் உடல் நலத்தில் முன்னேற்றம் காணப்படும் நவீன பொருட்களை வாங்க இன்று நல்ல நாள் சொந்தங்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். நினைத்தது அனைத்தும் நிறைவேறும்.

விருச்சிகம்

இன்று இல்லத்தில் உறவினர்களின் வருகையினால் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்பு உள்ளது.  நண்பர்களின் சந்திப்பால் ஆனந்தம் அதிகரிக்கும். தொழில் தொடர்பாக வெளியூர் செல்ல வேண்டி வரும். உடன் பிறந்தவர்களிடம் கருத்து வேற்றுமை வந்து நீங்கும். புதிய பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள்.

தனுசு

இன்று நீங்கள் செய்யும் செயல்களை மற்றவர்களின் இடையூறு தடையை ஏற்படுத்தும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்க காலதாமதம் ஏற்படும். பணியில் பொறுமையுடன் இருப்பதால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்த்துவிடலாம். இல்லத்தில் இருப்பவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

மகரம்

இன்று இல்லத்தில் பெண்களுக்கு வேலை சுமை அதிகமாக இருக்கும். பணி தொடர்பாக பயணங்கள், டென்ஷன் ஏற்படும். சேமிப்பு தொகை குறையும். விலை உயர்ந்த செலவுகளை குறைத்துக் கொள்வது நன்மை கொடுக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து இன்று உதவிகள் கிடைக்கப் பெறும். மன நிம்மதி இல்லாமல் காணப்படும்.

கும்பம்

இன்று பணவரவு போதுமானதாக இருக்கும். பிள்ளைகள் மூலம் சுபச்செலவுகள் அதிகரிக்கும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். பூர்வீக சொத்துக்களினால் நன்மை நடக்கும். தொழிலில் பங்குதாரர்கள் ஒற்றுமையாக செயல்பட்டு லாபத்தை பெறுவார்கள்.

மீனம்

இன்று நீங்கள் செயல்களை முடிக்க முடியாமல்  சிறிய தடங்கல்கள் ஏற்படும். வாகன பராமரிப்பிற்காக தொகை ஒன்றை சில விடக்கூடும். எதிர்பாராத உதவிகள் இன்று கிடைக்கப்பெறும்.பணியில் வேலைப்பளு கூடுதலாக இருந்தாலும் சக பணியாளர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள்.

Categories

Tech |