திருச்சியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயலால் சேலம் மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார். அதேபோல மாண்டஸ் புயல் எச்சரிக்கை காரணமாக நாமக்கல் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கும் ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் விடுமுறை அறிவித்துள்ளார். ஏற்கனவே மாண்டஸ் புயல் எச்சரிக்கை காரணமாக 17 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் திருச்சி மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதாவது காஞ்சிபுரம், விழுப்புரம், சென்னை, செங்கல்பட்டு, வேலூர், திருவள்ளூர், கடலூர், ராணிப்பேட்டை, திருவாரூர், தஞ்சை, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, சேலம், நாமக்கல் திருச்சி ஆகிய 18 மாவட்டங்களில் நாளை (09.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டனர். எனவே நாளை மொத்தம் 18 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.