இன்றைய பஞ்சாங்கம்
22-02-2020, மாசி 10, சனிக்கிழமை,
தேய்பிறை சதுர்த்தசி இரவு 07.03 வரை பின்பு அமாவாசை.
திருவோணம் நட்சத்திரம் பகல் 11.19 வரை பின்பு அவிட்டம்.
நாள் முழுவதும் சித்தயோகம்.
நேத்திரம் – 0. ஜீவன் – 1/2.
ஹயக்ரீவர் வழிபாடு நல்லது.
இராகு காலம் – காலை 09.00-10.30,
எம கண்டம் மதியம் 01.30-03.00,
குளிகன் காலை 06.00-07.30,
சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00
இன்றைய ராசிபலன்
மேஷம்
இன்று இல்லத்தில் செலவுகள் குறைந்து வரவு அதிகரிக்கும். திருமணம் போன்ற சுப முயற்சிகளில் முன்னேற்றமான சூழல் காணப்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு ஆனந்தத்தை கொடுக்கும். கடன் பிரச்சினைகள் அகலும். பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கப்பெறும்.
ரிஷபம்
இன்று நீங்கள் எதிர்பாராத நேரம் செலவுகள் அதிகரிக்கும். தொழிலில் மிகுந்த கவனமுடன் இருப்பது மிகவும் நல்லது. தொழில் தொடர்பாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதால் முன்னேற்றம் ஏற்படும். கொடுத்த கடன்களை வசூலிப்பதிலும் இடையூறுகள் இருக்கும். சகோதர சகோதரிகள் வழியில் நன்மைகள் நடக்கும்.
மிதுனம்
இன்று உங்களுக்கு மன உளைச்சல் ஏற்படும். மற்றவர்களின் மீது கோபம் கொள்ளும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் நிலைப்பதால் வீண் பேச்சுக்களை தவிர்க்க வேண்டும். தொழிலில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் தவிர்ப்பது மிகவும் நல்லது. செய்யும் எந்த காரியத்திலும் நிதானத்துடன் செயல்படுவது அவசியம்.
கடகம்
இன்று இல்லத்தில் பிள்ளைகள் பொறுப்புணர்ந்து நடந்துக் கொள்வார்கள். மற்றவர்களுக்கு உதவி புரியும் வகையில் உங்களுக்கு பணவரவுகள் தாராளமாக இருக்கும். வியாபார வளர்ச்சிக்கான செயல்களில் கவனமுடனிருப்பது நல்லது. எதிர்பார்த்த இடத்திலிருந்து அனைத்து உதவிகளும் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை இன்று குறைவடையும்.
சிம்மம்
இன்று புத்துணர்ச்சியுடன் அனைத்து செயல்களையும் செய்து முடிப்பீர்கள். இல்லத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் அகன்று விடும் திருமணம் போன்ற சுப முயற்சிகளில் நல்ல பலன் கிடைக்கும். உடல்நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது. வீட்டின் தேவைகளை நிவர்த்தி செய்வீர்கள்.
கன்னி
இன்று உடல் நலத்தில் சிறிய பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். வீட்டில் பிள்ளைகள் மூலம் மனவருத்தங்கள் ஏற்படும். பணியில் இருப்பவர்களுக்கு தேவையில்லாமல் இடம் மாற்றம் ஏற்படும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நன்மைகொடுக்கும். உறவினர்களால் நன்மை நடக்கும்.
துலாம்
இன்று இல்லத்தில் வீண் பிரச்சனைகள் தலை தூக்கும். பிள்ளைகளினால் மன அழுத்தம் அதிகரிக்கும். தொழிலில் லாபம் குறைந்த அளவிலேயே இருக்கும். பணியில் இருப்பவர்களுக்கு நெருக்கடிகள் குறைந்துவிடும். உறவினர்கள் வழியில் உதவிகள் கிடைக்கப் பெறும். சக பணியாளர்களை அனுசரித்து செல்வது நன்மையை கொடுக்கும்.
விருச்சிகம்
இன்று செய்யும் அனைத்து செயலையும் வெற்றிகரமாக செய்து முடித்து விடுவீர்கள். இல்லத்தில் பிள்ளைகளுடன் இருந்து வந்த கருத்து வேற்றுமை அகலும். பணியில் சக ஊழியர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். திருமணம் போன்ற சுப முயற்சிகளில் நல்ல பலன் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் இன்று எளிதில் கிடைக்கப் பெறும்.
தனுசு
இன்று வியாபாரத்தில் திடீர் செலவுகள் இருக்கும். குடும்பத்தில் பிள்ளைகள் மூலம் அமைதியற்ற சூழல் உருவாகும். எந்த செயலை செய்யும் முன்பும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கப் பெறும். தெய்வீக வழிபாடு நன்மையை கொடுக்கும்.
மகரம்
இன்று இல்லத்தில் உறவினர்கள் வழியில் சுபச் செய்திகள் வந்தடையும். பொருளாதாரம் சிறந்த அளவில் இருக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். பணியில் இருப்பவர்கள் மேலதிகாரிகளின் ஆதரவையும் அன்பையும் பெற்று விடுவீர்கள். தொழில் தொடர்பாக பெரியவர்களின் அறிமுகம் கிடைக்கப் பெறும்.
கும்பம்
இன்று உடலில் சோர்வு மந்தமும் காணப்படும். பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வமின்மை குறையும். தொழிலில் எதிர்பார்த்த லாபத்தை பெறுவதில் இடையூறுகள் ஏற்படும். பெரியவர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு நிம்மதியை கொடுக்கும். திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் நல்ல பலன் இருக்கும்.
மீனம்
இன்று இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். உறவினர்களின் வருகை மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். தொழிலில் பணிபுரிபவர்கள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். எதிர்பார்த்த லாபம் இன்று கிடைக்கும். வெளியூர் சென்று வேலை தேடி வேலை கிடைப்பதற்கான சூழல் இருக்கும். புதிதாய் பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள்.