இன்றைய பஞ்சாங்கம்
27-02-2020, மாசி 15, வியாழக்கிழமை,
நாள் முழுவதும் சதுர்த்தி.
ரேவதி நட்சத்திரம் பின்இரவு 01.08 வரை பின்பு அஸ்வினி.
சித்தயோகம் பின்இரவு 01.08 வரை பின்பு அமிர்தயோகம்.
நேத்திரம் – 0. ஜீவன் – 1/2.
மாத சதுர்த்தி.
விநாயகர் வழிபாடு நல்லது.
கரி நாள்.
தனிய நாள்.
சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் – மதியம் 01.30-03.00,
எம கண்டம்- காலை 06.00-07.30,
குளிகன் காலை 09.00-10.30,
சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.
இன்றைய ராசிபலன்
மேஷம்
இன்று இல்லத்தில் மகிழ்ச்சி நிறைந்த சூழல் உருவாகும். திருமணம் போன்ற சுப முயற்சிகளில் நல்ல பலன்கிடைக்கும். தொழிலில் பங்குதாரர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவதால் லாபம் பெறுவீர்கள். பணியில் இருந்து வந்த போட்டி பொறாமைவிலகும். பிள்ளைகள் படிப்பில் முன்னேற்றம் காண்பார்கள்.
ரிஷபம்
இன்று தொழில் தொடர்பாக பொருளாதார நிலை சிறந்த அளவில் இருக்கும். எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றியைக் கொடுக்கும். பெண்கள் விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் கொள்வார்கள். உடன் பிறந்தவர்களால் நன்மை நடக்கும். பணியில் இருப்பவர்களுக்கு வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.
மிதுனம்
இன்று பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடந்தேறும். உறவினர்களிடம் இருந்துவந்த மனவருத்தங்கள் அகலும். புதிதாய் வாகனம் வாங்குவதில் நாட்டம் செல்லும். நண்பர்களின் ஆலோசனை தொழில் வளர்ச்சிக்கு பெரிய அளவில் உதவி புரியும். பூர்வீக சொத்துக்களினால் நன்மை நடக்கும்.
கடகம்
இன்று அனைத்து செயல்களிலும் சுறுசுறுப்பின்றி காணப்படுவீர்கள். இல்லத்தில் கணவன் மனைவி இடையே தேவையற்ற மன வருத்தங்கள் ஏற்படும். விட்டுக்கொடுத்துச் செல்வதால் பிரச்சினைகளை தவிர்த்து விடலாம். தொழிலில் பங்குதாரர்களை அனுசரித்துச் செல்வதால் முன்னேற்றம் காணப்படும்.
சிம்மம்
இன்று உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் நிலைப்பதால் விரைவில் முடிவடைய வேண்டிய காரியங்கள் கூட மிகவும் தாமதமாக முடியும் முடியும். உடல்நலத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும்.தொழிலில் பெரிய அளவில் முதலீடுகளை இன்று தவிர்ப்பது நல்லது. புதிய முயற்சிகள் மற்றும் வெளியூர் பயணங்கள் இவற்றை காலம் தள்ளி வைப்பது சிறந்தது.
கன்னி
இன்று இல்லத்தில் உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை அதிகரிக்கும். பெற்றோரின் ஆதரவும் அன்பும் கூடும். புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். பணியில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களால் நன்மை நடக்கும். வியாபாரம் தொடர்பான வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.
துலாம்
இன்று இல்லத்தில் திடீர் தனவரவு ஏற்படும். சுபகாரிய முயற்சிகளுக்கு உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். நண்பர்களின் உதவியும் கிடைக்கப்பெறும். தெய்வீக வழிபாடு இன்று அதிகரிக்கும். தொழிலில் மரியாதையும் மதிப்பும் கூடும் வீட்டு தேவைகள் அனைத்தும் நிவர்த்தி ஆகும்.
விருச்சிகம்
இன்று இல்லத்தில் பணவரவு எதிர்பார்த்ததை விட அதிகமாகவே இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். கடன் அகலும் பணியில் இருப்பவர்களுக்கு பாராட்டுகள் குவியும். வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் இருந்து வந்த கருத்து வேற்றுமை அகன்று நட்பு அதிகரிக்கும்.
தனுசு
இன்று பொருளாதார நிலை மற்றும் உடல்நலம் மந்தமான சூழலிலேயே இருக்கும். இல்லத்தில் இருப்பவர்களிடம் சிறிய வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தொழில் தொடர்பாக எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெறுவீர்கள். உடனிருப்பவர்களின் உதவியும் கிடைத்து நன்மை நடக்கும்.
மகரம்
இன்று இல்லத்தில் உறவினர்களின் வருகையினால் நன்மை நடக்கும். எதிர்பார்த்திருந்த காரியம் எளிதில் நிறைவடையும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை அமையும். தொழிலில் இன்று எதிரிகள் கூட உங்களுக்கு நண்பர்களாக மாறும் கூடிய சூழல் ஏற்படும். பல பிரச்சனைகள் குறைவடையும்.
கும்பம்
இன்று தொழிலில் திடீர் பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். உறவினர்கள் மூலம் இல்லத்தில் தேவையற்ற செலவுகள் ஏற்படும் உடல்நலத்தில் அக்கறை தேவை. பணி தொடர்பாக பயணங்கள் மேற்கொண்டு அலைச்சலுக்கு ஏற்ப நற்பலன் கிடைக்கும். நண்பர்கள் உங்களது தேவையை உணர்ந்து உதவி புரிவார்கள்.
மீனம்
இன்று பணவரவு போதுமானதாக இருக்கும் தொழில்நுட்ப கருவிகளை வாங்க நல்ல நாள் ஆகும். செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் கடன் தொல்லைகள் ஓரளவு இன்று குறைந்துவிடும். சாதுரிய செயல்களால் வியாபாரத்தில் முன்னேற்றம் காணக் கூடிய வாய்ப்புகள் உருவாகும்.