இன்றைய பஞ்சாங்கம்
28-02-2020, மாசி 16, வெள்ளிக்கிழமை,
சதுர்த்தி காலை 06.45 பின்பு வளர்பிறை பஞ்சமி.
அஸ்வினி நட்சத்திரம் பின்இரவு 04.02 வரை பின்பு பரணி.
அமிர்தயோகம் பின்இரவு 04.02 வரை பின்பு சித்தயோகம்.
நேத்திரம் – 1. ஜீவன் – 1/2.
அம்மன் வழிபாடு நல்லது.
கரி நாள்.
சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் – பகல் 10.30-12.00,
எம கண்டம்- மதியம் 03.00-04.30,
குளிகன் காலை 07.30 -09.00,
சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00
இன்றைய ராசிபலன்
மேஷம்
இன்று பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் கிடைக்கப் பெற்று ஆனந்தம் அடைவீர்கள். குடும்பத்தில் செலவுகள் கட்டுக்குள் அடங்கும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி இன்று கிடைக்கப்பெறும். வியாபாரத்தில் புதிதாய் கூட்டாளிகள் வந்து இணைவார்கள். வெளியூர் பயணத்தின் மூலம் நன்மை நடக்கும்.
ரிஷபம்
இன்று செய்யும் அனைத்து செயல்களிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. இல்லத்தில் இருப்பவர்களின் மாற்று கருத்தினால் மனவருத்தங்கள் உருவாகும். விட்டுக்கொடுத்துச் செல்வதால் ஒற்றுமையை அதிகரிக்கலாம். உறவினர்கள் மூலம் நன்மை நடக்கும். தெய்வீக வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும்.
மிதுனம்
இன்று வீடு தேடி நற்செய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் வழியில் சுபச் செலவுகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து தாமதமாகவே உதவிகள் கிடைக்கப் பெறும். புதிதாய் பொருட்களை வாங்கிச் சேர்ப்பதில் நாட்டம் செல்லும். வியாபாரத்தில் கொடுக்கல்-வாங்கல் மனநிறைவான அளவில் இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.
கடகம்
இன்று மனதில் புதிய உத்வேகமும் நம்பிக்கையும் பிறக்கும். பணியில் இருப்பவர்களுக்கு புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். இல்லத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் அகலும். உடல் நலம் சீராகும். புதிதாய் பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். வியாபாரத்தின் வளர்ச்சிக்காக எதிர்பார்த்திருந்த வங்கிக்கடன் கிடைக்கப்பெறும்.
சிம்மம்
இன்று பணவரவு போதுமானதாக இருந்தாலும் அதற்கு ஏற்றார்போல் செலவு வந்து சேரும். பணியில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகள் மூலம் நெருக்கடிகள் உருவாகும். பொறுமையைக் கடைப்பிடிப்பதன் வாயிலாக பிரச்சினைகளை தவிர்த்து விடலாம். மனைவி குடும்பத்தினரின் மூலம் உதவிகள் கிடைக்கப்பெறும். திருமணம் போன்ற சுப காரியங்கள் கை கூடி வரும்.
கன்னி
இன்று நீங்கள் மனவருத்தத்துடன் காணப்படுவீர்கள். உடல்நலத்தில் மந்தமான சூழல் காணப்படும். உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் நிலைப்பதால் புதிதாய் எந்த முயற்சியும் செய்யாமல் இருப்பது நன்மை பயக்கும். மற்றவர்களின் விஷயங்களில் நீங்கள் ஈடுபடாமல் இருத்தல் நன்று. பயணங்களை தவிர்க்கவும்.
துலாம்
இன்று பணவரவு போதுமானதாக அமையும். புதிதாய் முயற்சிகளைத் தொடங்க நல்ல நாள் ஆகும். உடல் நலத்தில் முன்னேற்றம் காணப்படும். பணி தொடர்பாக வெளியூர் பயணம் செல்ல வேண்டி வரும். வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை நீங்கும் வளர்ச்சி பெறும்.
விருச்சிகம்
இன்று உடன் பிறந்தவர்கள் மூலம் சுபச் செய்திகள் வீடு வந்து சேரும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். பெரியவர்களின் பாராட்டு கிடைக்கும். திருமணம் போன்ற சுப முயற்சிகளில் நல்ல பலன் இருக்கும். வியாபாரம் சிறந்த அளவில் இருக்கும். பணியில் இருப்பவர்களுக்கு புதிய மாற்றங்கள் ஏற்படும்.
தனுசு
இன்று இல்லத்தில் மருத்துவ செலவுகள் வந்து செல்லும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் இடையூறுகள் பல ஏற்படும். எதுவாயினும் போராடி வெற்றி பெறுவீர்கள். நண்பர்களின் அறிவுரைகள் மூலம் பிரச்சினைகளை சமாளித்து விடுவீர்கள் .உறவினர்கள் இன்று உதவிக்கரம் நீட்டுவார்கள்.
மகரம்
இன்று பிள்ளைகள் மூலம் தேவையற்ற செலவுகள் ஏற்படும். உறவினர்களால் இல்லத்தில் தேவையற்ற பிரச்சனைகள் உருவாகும். ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்துச் செயல்படுவதால் பணியில் சிக்கல்களை தவிர்த்து விடலாம். சிக்கனத்தைக் கடைபிடிப்பது மூலம் பொருளாதார நெருக்கடி குறையும்.
கும்பம்
இன்று நீங்கள் நினைத்த அனைத்து காரியத்தையும் செய்து முடித்து விடுவீர்கள். உறவினர்கள் உதவி புரிவதால் வீட்டில் மகிழ்ச்சி தரும் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். சகோதர சகோதரி வழியில் ஒற்றுமை அதிகரிக்கும். தொழிலின் வளர்ச்சி கருதி புதிதாய் திட்டம் போட்டு அதில் வெற்றியும் பெறுவீர்கள். வருமானம் அதிகரிக்கும்.
மீனம்
இன்று பணவரவு குறைந்த அளவிலேயே இருக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் பொழுது கவனத்துடன் இருப்பது நல்லது. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் தடைகள் பல ஏற்படும். தொழிலில் முன்னேற்றமான சூழல் காணப்படும். பணியில் இருந்தவர்களுக்கு இதுவரை இருந்த பிரச்சினைகள் அகன்று விடும். நண்பர்களினால் நன்மை நடக்கும்..