Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

நாளைய ( 02.03.2020 ) நாள் எப்படி இருக்கு ? ராசி பலன் இதோ ….!!

இன்றைய  பஞ்சாங்கம்

02-03-2020, மாசி 19, திங்கட்கிழமை,

சப்தமி பகல் 12.53 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி.

கிருத்திகை நட்சத்திரம் காலை 08.55 வரை பின்பு ரோகிணி.

மரணயோகம் காலை 08.55 வரை பின்பு அமிர்தயோகம்.

நேத்திரம் – 1. ஜீவன் – 1/2.

சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம்-  காலை 07.30 -09.00,

எம கண்டம்- 10.30 – 12.00,

குளிகன்- மதியம் 01.30-03.00,

சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.

இன்றைய ராசிபலன்

மேஷம்

இன்று இல்லத்தில் பிள்ளைகள் மூலம் தேவையற்ற செலவுகள் ஏற்படும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் மந்தமான நிலை காணப்படும். வாகனங்களில் பயணிக்கும் போது எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து இன்று உதவிகள் வந்தடையும்.

ரிஷபம்

இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றியே வந்துசேரும். பெரியவர்களின் ஆதரவால் தொழிலில் முன்னேற்றம் காணப்படும். பணியில் இருப்பவர்களுக்கு இருந்து வந்த எதிர்ப்புகள் அனைத்தும் விலகும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். எதிர்பாராத நேரத்தில் இனிய நிகழ்ச்சிகள் நடக்கும்.

மிதுனம்

இன்று பணவரவு மந்தமாகவே இருக்கும் உறவினர்கள் மூலம் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். பணியில் சக பணியாளர்களை அனுசரித்து செல்வதால் நன்மை நடக்கும்.  நவீன தொழில்நுட்ப கருவிகளை வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

கடகம்

இன்று உத்தியோகஸ்தர்கள் பணியில் மகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். கடினமான காரியத்தை கூட மிகவும் எளிதில் முடித்து விடுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். புதிய பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். வியாபாரத்தில் சிறந்த அளவில் லாபம் கிடைக்கும்.புதிதாய் ஒப்பந்தங்கள் கைகூடிவரும்.

சிம்மம்

இன்று இல்லத்தில் சுபச் செய்திகள் கிடைக்கப் பெறும். ஆனந்தம் அடையக் கூடிய சூழல் உருவாகும். பெண்கள் விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் நாட்டம் செல்லும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். தொழில் தொடர்பாக வெளிவட்டார நட்பு விரிவடையும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.

கன்னி

இன்று செய்யும் அனைத்து செயல்களிலும் ஆர்வமின்றி காணப்படுவீர்கள். இல்லத்தில் கணவன்-மனைவி இடையே சிறிய பிரச்சினைகள் உருவாகும்.  தேவையற்ற செலவு களினால் சேமிப்பு குறைய வாய்ப்பு உள்ளது. சிக்கனத்தை கடைப்பிடித்தல் நல்லது. பங்குதாரர்களின் ஆலோசனையை நாள் லாபம் பெருகும்.

துலாம்

இன்று உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் நிலை ப்பதால் செய்யும் அனைத்து செயல்களிலும் தாமதம் ஏற்படும். தொழிலில் மற்றவர்களை நம்பி புதிதாய் எந்த முயற்சிகளையும் செய்யாமல் இருப்பது சிறந்தது. வெளியூர் பயணங்களை இன்று தவிர்த்து விடவும் கொடுக்கல் வாங்கலில் கவனம்.

விருச்சிகம்

இன்று பிள்ளைகள் மிகவும் சுறுசுறுப்புடன் இருப்பார்கள். பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த வங்கிக்கடன் கிடைக்கப் பெறும். புதிய நபரின் அறிமுகத்தின் ஆல் தொழிலில் முன்னேற்றம் காணப்படும். பயணங்களினால் நன்மை நடக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்புக்குத் தகுந்த ஊதியம் கிடைக்கும்.

தனுசு

இன்று பணவரவு அதிக அளவில் இருக்கும். வெளியூர் பயணங்கள் மூலம் வெளிவட்டார நட்பு விரிவடையும். இல்லத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் கைகூடிவரும். பெரியவர்களின் ஆலோசனைகளினால்  வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும்.

மகரம்

இன்று வரவுக்கு மேல் செலவுகள் இருப்பதால் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும். ஆரோக்கியம் தொடர்பான பாதிப்புகள் ஏற்படும். இல்லத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வதால் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பணியில் முன்னேற்றம் காணப்படும்.

கும்பம்

இன்று வரவுக்கு மேல் செலவுகள் இருக்கும். நண்பர்களுடன் கருத்து வேற்றுமை தோன்றி வியாபாரத்தில் கூட்டாளிகளினால் பிரச்சனை  ஏற்படும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நன்மையை கொடுக்கும். உறவினர்கள் மூலம் நன்மை நடக்கும்.

மீனம் 

இன்று மன அமைதி ஏற்படும். மகிழ்ச்சியான சூழல் உருவாகும். நினைத்ததை நினைத்தபடி நிறைவேற்றுவீர்கள். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்த்த உதவி கிடைக்கப் பெறும். பழைய பாக்கிகள் வசூலாகும் பொருளாதாரம் சிறந்த அளவில் இருக்கும்.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |