Categories
விளையாட்டு ஹாக்கி

நாளை அர்ஜென்டினா செல்கிறது… இந்திய பெண்கள் ஹாக்கி அணி..!!

ராணி ராம்பால் தலைமையிலான இந்திய பெண்கள் ஹாக்கி அணி, வரும் ஜன. 17 முதல் 31 வரை, 8 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க அர்ஜென்டினா செல்கிறது.

அர்ஜென்டினா செல்லக்கூடிய அணியில் 25 வீராங்கனைகள் உட்பட 32 பேர் கொண்ட இந்திய அணியினர் இருப்பர். “அர்ஜென்டினா தொடரில் கிடைக்கும் அனுபவம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு சிறந்த பயிற்சியாக அமையும். டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே இலக்கு. இம்முறை டோக்கியோவில் புதிய வரலாறு படைத்து இந்தியாவுக்கு பெருமை தேடித் தருவோம் என்ற நம்பிக்கை உள்ளது.” என கேப்டன் ராணி ராம்பால் கூறினார்.

Categories

Tech |