இன்றைய பஞ்சாங்கம்
15-02-2020, மாசி 03, சனிக்கிழமை,
சப்தமி மாலை 04.29 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி.
விசாகம் நட்சத்திரம் பின்இரவு 05.09 வரை பின்பு அனுஷம்.
நாள் முழுவதும் சித்தயோகம்.
நேத்திரம் – 1. ஜீவன் – 1/2.
இராகு காலம் – காலை 09.00-10.30,
எம கண்டம் மதியம் 01.30-03.00,
குளிகன் காலை 06.00-07.30,
சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
மேஷம்
இன்று நினைத்த காரியங்கள் நல்ல முறையில் நடந்தேறும். பிள்ளைகளினால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கப் பெறும். குடும்பத்தினருடன் தொலைதூரப் பயணம் செல்லக்கூடும். வேலை தேடுபவர்கள் புதிய வேலையை கண்டறிவீர்கள். தொழிலில் இன்று எதிரிகள் கூட நண்பர்களாக மாறுவார்கள்.
ரிஷபம்
இன்று இல்லத்தில் திடீர் தனவரவு இருக்கும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவதில் நாட்டம் செல்லும். பணியில் உயர் அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். தொழில் தொடர்பான வெளியூர் பயணங்களால் நன்மை நடக்கும். நண்பர்கள் இன்று உதவிக்கரம் நீட்டுவார்கள். வீட்டின் தேவைகள் அனைத்தும் நிவர்த்தி ஆகும்.
மிதுனம்
இன்று இல்லத்தில் ஒற்றுமை குறைய வாய்ப்பு உள்ளது. பூர்வீக சொத்துகளால் அலைச்சல் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் கிடைக்கும். தொழிலில் நல்ல மாற்றங்கள் காணப்படும். வெளியூர் பயணத்தினால் நன்மை நடக்கும்.
கடகம்
இன்று இல்லத்தில் பணவரவு போதுமானதாக இருக்கும். பணவரவிற்கு தகுந்தார்போல் செலவுகளும் அமையும். பிள்ளைகள் மூலம் வீண் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நண்பர்களின் உதவியினால் தொழிலில் இருந்து வந்த சிக்கல்கள் அனைத்தும் அகலும். உங்கள் முயற்சிக்கு குடும்பத்தினரின் ஆதரவு பெருகும்.
சிம்மம்
இன்று உறவினர்கள் மூலம் நற்செய்திகள் வந்து சேரும். இல்லத்தில் ஒற்றுமை சிறந்த அளவில் இருக்கும். உத்தியோகத்தில் சக பணியாளர்களால் நன்மை நடக்கும். வியாபாரத்தில் மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் அதிகரிக்கும். கடன் அகலும். சேமிப்பு பெருகும்.
கன்னி
இன்று பணிபுரிபவர்களுக்கு வேலையில் ஈடுபாடு குறைந்து காணப்படும். புதிய முயற்சி எடுத்தால் தடங்கல் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் கருத்து வேற்றுமை தோன்றும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து அதன்மூலம் நன்மை அடையலாம். பெரியவர்களின் நட்பு மனதிற்கு நம்பிக்கையை கொடுக்கும்.
துலாம்
இன்று உடல் நலம் சிறந்த அளவில் இருக்கும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் செயல்படுவார்கள். உடன்பிறந்தவர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கொடுத்த கடன்கள் அனைத்தும் இன்று வசூலாகும். திருமணம் போன்ற சுப முயற்சிகளில் இருந்த தடைகள் அகலும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள்.
விருச்சிகம்
இன்று வியாபாரத்தில் மந்தமான நிலை இருக்கும். வரவேண்டிய வரவுகளில் தடங்கல்கள் காணப்படும்.. உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நன்மை கொடுக்கும் திருமணம் போன்ற சுப முயற்சிகளில் நல்ல பலன் கிடைக்கும். பெரியவர்களின் மதிப்பை பெறுவீர்கள்.
தனுசு
இன்று பொருளாதாரம் சிறந்த முறையில் காணப்படும். இல்லத்தில் சுப செலவுகள் நடக்க வாய்ப்புகள் உள்ளது. உறவினர்களால் நன்மை நடக்கும் நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். வியாபாரத்தில் பெயர் புகழ் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கப் பெறும். வருமானம் பெருகும்.
மகரம்
இன்று செய்யும் அனைத்து செயல்களும் வெற்றியை கொடுக்கும். உறவின.ர்களின் வருகையினால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறும் புதிதாக வியாபாரம் தொடங்கும் முயற்சிகளில் முன்னேற்றம் காணப்படும். கொடுத்த கடன் என்று திருப்பிக் கிடைக்கும்.
கும்பம்
இன்று பொருளாதார நிலை மந்தமாகவே காணப்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும் தொழிலில் பங்குதாரர்களின் ஆதரவினால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் முன்னேற்றம் காணப்படும். வேலைகளில் பொறுமையுடன் செயல்படுவதால் நன்மை நடக்கும்.
மீனம்
இன்று வீண் மன வருத்தங்கள் தோன்றும். ராசியில் சந்திராஷ்டமம் நீடிப்பதால் வெளி நபர்களிடம் பேசுவதை குறைத்துக் கொள்வது நன்மை கொடுக்கும். திருமணம் போன்ற சுப முயற்சிகளையும் வெளியூர் செல்ல வேண்டிய சூழலையும் தள்ளி வைப்பது சிறந்தது.