ஜிப்ஸி படத்திற்கான இரண்டாவது டீசரை நடிகர் சூர்யா வெளியிட உள்ளார்.
நடிகர் ஜீவா நடித்துள்ள ஜிப்ஸி திரைப்படம் நீண்ட நாட்களாக சென்சார் பிரச்சனை காரணமாக வெளியாக வெளியாவதில் தாமதம் இருந்து வந்தது. இந்நிலையில் இந்த படத்தை வருகின்ற மார்ச் 6 ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன்படி,
முதல் டீசர் ஏற்கனவே வெளியாகி பல சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், இதனுடைய இரண்டாவது டீஸரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன்படி பொதுநல பார்வை கொண்ட ஒரு நபர் இந்த டீசரை வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு நடிகர் சூர்யாவை வெளியிடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அந்த வகையில், நாளை மாலை 6 மணிக்கு ஜிப்ஸி படத்தின் இரண்டாவது டீஸரை நடிகர் சூர்யா வெளியிட இருக்கிறார். இந்நிலையில் டீசர்க்கான எதிர்பார்ப்பு பல சமூக சிந்தனையாளர்கள் இடையே பரவி காணப்படுகிறது.