தமிழகத்தில் நாளை கொரோனா தடுப்பூசி ஒத்திகை தொடங்க உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மக்களை ஆட்டிப் படைத்து வருகிறது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல், சானிடைசர் பயன்படுத்துதல் போன்றவற்றை மக்கள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். இதன் மூலம் கொரோனா பரவலை தடுக்க முடியும். இந்நிலையில் “முக கவசம் உயிர்க்கவசம்” என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை அரசு ஓமந்தூரார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று தொடங்கி வைத்துள்ளார்.
இதிலக் இதில் முக கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு கையேடு ஒன்றையும் அவர் மருத்துவ பணியாளர்களுக்கு வழங்கி உள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கொரோனா தடுப்பு பணியில் தமிழகம் முன்மாதிரியாக இருக்கிறது. சுகாதாரத்துறைக்கு 2020 மறக்க முடியாத ஆண்டாக இருக்கும். உயிர் பயத்தை காட்டிய கொரோனாவிற்கு எதிராக நாம் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். 2021 ஆம் வருடம் சிறப்பான பாதுகாப்பு வருடமாக அமையும் என்று நம்புகிறோம்.
இலவச தடுப்பூசி செலுத்துவதற்காக 8881 மையம் மற்றும் 6 லட்சம் கள பணியாளர்கள் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனால் தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகையை ஜனவரி-2 (நாளை) முதல் தொடங்க உள்ளது. கூடிய சீக்கிரம் தமிழகத்தில் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும். லண்டனிலிருந்து 1554 பேர் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் பல தங்களுடைய முகவரியை மாற்றிக் கொடுத்தால் அவர்களை கண்டுபிடிப்பது கஷ்டமாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.