வடபழனி முருகன் கோவிலில் நாளை இதற்கெல்லாம் அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
நாளை முருகனின் ஆறுபடை வீடுகளில் தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இதையடுத்து ஏராளமான பக்தர்கள் முருகனை தரிசிக்க வருவதுண்டு. இந்நிலையில் சென்னை வடபழனி முருகன் கோயிலில் தைப்பூசத் தினத்தில் காலை 5.30 முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோயிலுக்கு வரும் பக்தர்கள் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். திருமணம் நடைபெறுதல், பால்குடம், காவடி மற்றும் அலகு குத்துதல் ஆகியவற்றிற்கு அனுமதி இல்லை என்றும் அறிவித்துள்ளது.