Categories
தேசிய செய்திகள்

நாளை முட்டாள்கள் தினம்… கொரோனா குறித்த தவறான தகவல்களை பரப்பகூடாது என எச்சரிக்கை!

கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில் உலகளவில் உயிரிழப்பு 40 ஆயிரத்தை நெருங்குகிறது. இந்தியாவை பொறுத்தவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது. கொரோனா பாதிப்பால் 32 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து மத்திய அரசு ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால் அத்தியாவசிய பணிகளை தவிர வேறு எதற்கும் மக்கள் வெளியே வர கூடாது என கூறப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பரவாமல் தடுக்க நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களின் எல்லைகளை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு வதந்திகள் பரவி வருகிறது. கொரோனா பரவும் அச்சம் அதிகரித்து இருப்பதால் ஊரடங்கு உத்தரவு திட்டமிட்டபடி ஏப்ரல் 14ம் தேதியுடன் முடிந்திவிடாது. அதற்கு மேலும் நீட்டிக்கப்படும் என்று தகவல் வெளியான நிலையில் அதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

இதுபோல பல்வேறு வதந்திகள் வெளியாகி வரும் நிலையில் நாளை ஏப்ரல் 1ம் தேதியான முட்டாள்கள் தினம் என்பதால் தவறான தகவல்களை பரப்பக்கூடாது என மகாராஷ்டிர அமைச்சர் அனில் தேஷ்முக் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் கொரோனா தொடர்பாக ஏதேனும் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |