பொங்கல் பரிசுத்தொகை வாங்க சர்க்கரை அட்டையை அரிசி அட்டையாக மாற்ற நாளை கடைசி நாள் என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்படும் என்று இன்று தேர்தல் பிரச்சாரத்தில் அறிவித்தார். ஏற்கனவே பொங்கலுக்கு ரூ.1000 வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பு மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே அரிசி குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே இந்த பொங்கல் பரிசை வாங்க முடியும்.
இதையடுத்து சர்க்கரை குடும்ப அட்டையை வைத்திருப்பவர்கள் தகுதி அடிப்படையில் அரிசி குடும்ப அட்டை களாக மாற்ற செய்ய விரும்பினால் அதற்கான விண்ணப்பங்களுடன் தங்களுடைய குடும்ப அட்டையின் நகலினை இணைத்து நாளைக்குள் www.tnpds.gov.in என்ற இணையதளத்திலும், சம்பந்தப்பட்ட வட்ட அலுவலர் மற்றும் உதவி ஆணையர்களிடமும் சமர்ப்பிக்கவேண்டும். அரிசி அட்டையாக மாற்றம் செய்தால் மட்டுமே பொங்கலுக்கு முதல்வர் அறிவித்த ரூ.2500 கிடைக்கும் இல்லையென்றால் கிடைக்காது.