Categories
தேசிய செய்திகள்

நாளையே கடைசி நாள்… தவறினால் ரூ.10,000 அபராதம்..!!

2019-2020 நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி டிசம்பர் 31 ஆகும். இந்த காலக்கெடு ஜூலை 31 முதல் டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

காலக்கெடு நீட்டிக்கப் பட்டிருந்தாலும்  தனிநபர்கள் தங்கள் வருமானத்தை தாக்கல் செய்வதில் தாமதம் காட்டினால், அதற்கு தாமதமாக தாக்கல் செய்யும் கட்டணத்திற்கு வட்டி செலுத்த வேண்டும். வருமான வரி சட்டத்தின் 734 ஏ மற்றும் 234b பிரிவுகளின்கீழ் தனிநபர்கள் தங்கள் காலக்கெடு முடிந்த உடன் வருமான வரியை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், அதற்கு மாதாந்திர வட்டி வசூலிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும் வருமான வரி செலுத்தாமல் நிலுவையில் உள்ளவர்களுக்கு மட்டும் இந்த அபராத வட்டி தொகை பொருந்தும். டிசம்பர் 31 க்கும் முன்னால் தாக்கல் செய்யப்பட்டால் 5000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். 31 க்கு பிறகு வருமானம் தாக்கல் செய்யப்பட்டால் 10 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்படும். இருப்பினும் தனிநபரின் மொத்த வருமானம் 5 லட்சத்திற்கு குறைவாக இருந்தால் கட்டணம் ஆயிரத்தை தாண்டாது. இந்த அபராதத்தை கட்ட தவறினால் மூன்று மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கலாம்,

Categories

Tech |