திருச்சியில் நாளை நடைபெற வேண்டிய தடுப்பூசி முகாம்கள் நகர் மற்றும் ஊரக பகுதிகளில் நாளை ஒரு நாள் மட்டும் நிறுத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வந்தது. இவற்றை கட்டுக்குள் வைப்பதற்காக தமிழக அரசு தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தியது. இதன் விளைவாக பல மாவட்டங்களில் தோற்று குறைந்துள்ளது. அது மட்டுமில்லாமல் மக்களுக்கு தடுப்பூசி போடும் பணியும் மும்முரமாக செயல்பட்டு வருகின்றது. மேலும் தடுப்பூசிகள் வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது.
இந்நிலையில் திருச்சியில் நாளை நடைபெற வேண்டிய தடுப்பூசி முகாம்கள் நகர் மற்றும் ஊரக பகுதிகளில் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சிவராசு அறிவித்துள்ளார். தடுப்பூசிகளின் கையிருப்பு நிலையினைக் கருத்தில் கொண்டு நாளை முகாம்கள் ரத்து செய்யப்படுவதாகவும், தடுப்பூசி மருந்துகள் வந்தவுடன் முகாம்கள் மீண்டும் செயல்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.