Categories
மாநில செய்திகள்

“நாளை மட்டும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறாது”…. சுகாதாரத்துறை அறிவுப்பு…!!

போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுவதால் நாளை  மட்டும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறாது என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

நாளை தமிழகம் முழுவதும்  போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. இதில், சுகாதாரத்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கொரோனா அறிகுறி உள்ளவர்கள் மட்டும்  சொட்டு மருந்து போடும் இடத்திற்கு வருவதை  தவிர்க்கவும், கொரோனாவிலிருந்து மீண்ட குழந்தைகள் போட்டுக் கொள்ளலாம். கொரோனா உள்ள குழந்தைகள் இருப்பின் சொட்டு மருந்து போட வேண்டாம்.

தமிழகத்தில் 43,051 பூத்களில் 70.26 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்படவுள்ளது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சொட்டு மருந்து  போடப்படும். கொரோனா அறிகுறிகளான சளி இருமல் காய்ச்சல் ஆகியவை இருந்தாலும் போலியோ சொட்டு மருந்து போட்டுக் கொள்வதை தவிர்க்க வலியுறுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் போலியோ சொட்டு மருந்து மருத்துவமனைகளில் போட்டிருந்தாலும் மீண்டும் போட்டுக் கொள்ள வேண்டும், புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கப்படும்.

3000க்கும் மேற்பட்ட அரசு வாகனங்கள் களத்தில் இருக்கும். பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், டோல் பிளாசா ஆகிய இடங்களிலும் போலியோ சொட்டு மருந்து முகாம் அமைக்கப்படும். சுமார் 2 லட்சம் சுகாதார ஊழியர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஏற்கெனவே கொரோனா பாதிக்கப்பட்டு மீண்ட குழந்தைகள் போலியோ சொட்டு மருந்தை போட்டுக் கொள்ள தடை இல்லை என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |