தை மாதத்தில் பொங்கல் திருநாளை அடுத்து மிக முக்கிய நாளாக பார்க்கப்படுவது, தை அமாவாசை தான்.
வான் மண்டலத்தில் இருக்கும் சூரிய ஜோதிட கணக்கின்படி மகரத்தில் உச்சம் பெறும் மாதம் இந்த தை மாதம். அதன் காரணமாக இந்த மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் சிறப்பு பெற்றது. அமாவாசை நாட்கள் முன்னோர்களுக்கு உகந்த நாளாக பார்க்கப்படுகிறது. முன்னோர்களை வழிபட்டு நாம் நன்றியை செலுத்தும் நாள் இந்த நாள். அமாவாசை அன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் மகாவிஷ்ணு, சிவபெருமான் மற்றும் முன்னோர்கள் ஆசிகளுடன் எண்ணற்ற நன்மை கிடைக்கும் என்பதுதான்.
இந்த ஆண்டு தை 29ஆம் தேதி பிப்ரவரி 11ஆம் தேதி ஆடிஅமாவாசை வருகிறது. அந்த நாளில் தர்ப்பணம் கொடுப்பது எப்படி? என்னென்ன தர்ப்பணம் கொடுக்க வேண்டும் . என்னென்ன செய்ய வேண்டும், செய்யக் கூடாது என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
நம்முடைய முன்னோர்கள் சக்தி நிறைந்தவர்கள் அவர்களை வழிபட்டால் புண்ணியமும், செல்வமும் கிடைக்கும். நம்முடைய வீட்டு வாசலில் காத்திருக்கும் முன்னோர்களுக்கு நாம் தர்மம் கொடுக்க வேண்டும். காலை ஆறு முப்பது மணிக்குள் தர்ப்பணம் கொடுப்பது நல்லது. அதேபோல் மத்திய வேலை தர்ப்பணம் செய்வது மிகவும் உகந்தது. அப்படி கொடுக்க முடியாதவர்கள் சூரியன் மறைவதற்குள் தர்பணம் கொடுங்கள். ராகு காலம், எமகண்டம் ஆகிய நேரங்களில் தர்ப்பணம் கொடுக்க கூடாது.
தர்ப்பணம் கொடுக்கும் போது தங்களின் கோத்திரம், குலதெய்வம், மூன்று தலைமுறைகளின் பெயர்களை கூறவேண்டும்.
செய்யக்கூடாதது
முன்னோர்கள் வழிபாட்டுக்கு உகந்தது இந்த தை அமாவாசை. முதலில் கோலம் போடுவதை தவிர்க்க வேண்டும். தர்ப்பணம் கொடுக்கும் போது எப்போதும் கிழக்கு முகமாக பார்த்தபடி கொடுக்க வேண்டும். தர்மம் செய்யும் போது கருப்பு எள் மற்றவர்களிடமிருந்து கடன் வாங்குதல் கூடாது.
கரையில் கொண்டு நீரில் தர்ப்பணம் செய்யக்கூடாது. நீரின் இருப்பவர்கள் நீரிலும், கரையில் இருப்பவர்கள் கரையிலும் தான் தர்ப்பணம் செய்யவேண்டும். தை அமாவாசை வழிபாட்டில் காகத்திற்கு முக்கியத்துவம் அளியுங்கள். சனீஸ்வர பகவானின் வாகனமான காகம் எமலோகத்தின் வாசலில் இருப்பதாகவும், அது எமனின் தூதுவன் எனவும் கூறப்படுகிறது. காசுக்கு சாதம் வைத்தால் எமலோகத்தில் வாழும் நமது முன்னோர்கள் அமைதி அடைந்து நமக்கு ஆசி வழங்குவார்கள்.
முன்னோர்களுக்கு கண்கண்ட தெய்வமாக விளங்குபவர் மகாவிஷ்ணு. அவர்களுக்கு துளசி மாலை சாற்றி வழிபடுவது விசேஷம். தை அமாவாசை அன்று வீட்டில் இருக்கும் முன்னோர்களின் படத்திற்கு, துளசி மாலையோ துளசி இலையை சமர்ப்பிக்கவேண்டும். இதனால் மகாவிஷ்ணு மகிழ்ச்சி அடைவார்கள். இதன் காரணமாக விஷ்ணுவின் ஆசியும் கிடைக்கும், நம் முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும்.