Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

நாளைய ( 16.02.2020 ) நாள் எப்படி இருக்கு ? ராசி பலன் இதோ ….!!

இன்றைய  பஞ்சாங்கம்

16-02-2020, மாசி 04, ஞாயிற்றுக்கிழமை,

அஷ்டமி பகல் 03.14 வரை பின்பு தேய்பிறை நவமி.

அனுஷம் நட்சத்திரம் பின்இரவு 04.53 வரை பின்பு கேட்டை.

நாள் முழுவதும் மரணயோகம்.

நேத்திரம் – 1. ஜீவன் – 1/2.

கால பைரவர் வழிபாடு நல்லது.

சுபமுயற்சிகளை` தவிர்க்கவும்.

இராகு காலம் – மாலை 04.30 – 06.00,

எம கண்டம் – பகல் 12.00 – 01.30,

குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30,

சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00,  மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,

 

மேஷம்

இன்று உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் நினைப்பதால் மனக்குழப்பங்கள் ஏற்படும். பிரச்சனைகள் உருவாகும் வியாபாரம் தொடர்பாக புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபட வேண்டாம். வாகனத்தில் பயணிக்கும் பொழுது நிதானத்தை கடைப்பிடிக்கவும்.

ரிஷபம்

இன்று பிள்ளைகள் பெருமை அடைய செய்வார்கள். உடல் நலம் சிறந்த அளவில் இருக்கும்.திருமணம் போன்ற சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நல்ல முறையில் முடியும். நண்பர்களால்  நன்மை நடக்கும் பங்குதாரர்களின் ஒத்துழைப்பால் தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படும். ஆபரணம் ஆடை வாங்கி சேர்ப்பீர்கள்.

மிதுனம்

இன்று பண வரவு தாராளமாக இருக்கும். இல்லத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் செயல்படுவார்கள். தெய்வீக வழிபாட்டிற்காக வெளியூர் செல்ல வேண்டி வரும். தேவைகளை நிவர்த்தி செய்வீர்கள். தொழிலில் கொடுத்த கடன்கள் மற்றும் பாக்கிகள் வசூலாகும்.

கடகம்

இன்று நினைத்த காரியங்களில் பொறுமையுடன் இருப்பது நல்லது. விலைஉயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள் . உறவினர்களிடம் அனுசரித்துச் செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்த்து விடலாம். இல்லத்தில் பெண்கள் வழியில் நல்ல பலன் கிடைக்கும்.

சிம்மம்

இன்று இல்லத்தில் மகிழ்ச்சி குறைந்த சூழல் நிலவும். உறவினர்களுடன் மனவருத்தம் காணப்படும். உடலில் வலிகள் வந்து அகலும். சேமிப்பு இன்று குறையும். அறிவுடன் செயல்பட்டால் தொழிலில் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். நண்பர்கள் உங்களின் தேவையை உணர்ந்து உதவி புரிவார்கள். சுபகாரியங்கள் கைகூடி வரும்.

கன்னி

இன்று நீங்கள் செய்யும் அனைத்து செயல்களிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். பூர்வீக சொத்துக்களில் மூலம் லாபம் அதிகரிக்கும். பெரியவர்களின் அறிமுகம் கிடைக்கப் பெற்று நன்மை நடக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த பாதிப்புகள் அகலும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

துலாம்

இன்று வீண் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உறவினர்களிடம் கருத்து வேற்றுமை தோன்றும். பயணங்கள் மூலம் அலைச்சல் இருக்கும். பணியாளர்களுக்கு வேலையில் உயர் பதவிகள் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வியாபாரம் தொடர்பாக வெளி மாநிலத்தவருடன்  நட்பு ஏற்படும்.

விருச்சிகம்

இன்று எந்த செயல் ஆயினும் முழுமையான ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் உங்களின் முயற்சிக்கு பக்கபலமாக இருப்பார்கள். வியாபார வளர்ச்சிக்கு எதிர்பார்த்திருந்த உதவிகள் இன்று கிடைக்கும். பெண்களுக்கு இல்லத்தில் வேலை சுமை இன்று குறைவடையும். விலை உயர்ந்த பொருள் வாங்கி சேர்ப்பீர்கள்.

தனுசு

இன்று தொழிலில் பங்குதாரர்களின் உதவியால் நல்ல லாபம் கிடைக்கும். இல்லத்தில் இருந்து வந்த கருத்து வேற்றுமை அகலும். அனைத்து செயல்களிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் எண்ணம் மேலோங்கும். சேமிப்பு அதிகமாகும் அளவிற்கு வருமானம் இருக்கும்.

மகரம்

இன்று உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை அதிகரிக்கும். திருமணம் போன்ற சுப பேச்சுவார்த்தைகள் இல்லத்தில் தொடங்குவார்கள். தொழில் தொடர்பான வெளியூர் பயணங்களால் நன்மை நடக்கும். வருமானம் பன்மடங்கு ஆகும். செலவுகள் இன்று குறைவடையும் எடுக்கும் புதிய முயற்சிகளில் நன்மை நடக்கும்

கும்பம்

இன்று இனிய செய்திகள் வீடு தேடி வரும். குடும்பத்தில் ஆனந்தம் பொங்கும். பணியில் இருப்பவர்களுக்கு இருந்துவந்த பொறாமை போட்டிகள் இன்று குறைவடையும். தொழில் முன்னேற்றத்திற்காக எடுக்கும் அனைத்து முயற்சியும் வெற்றியை கொடுக்கும். பாக்கிகள் வசூலாகும். சேமிப்பு அதிகரிக்கும்.

மீனம்

இன்று பிள்ளைகள் மூலம் மனவருத்தங்கள் ஏற்படும்.  விலை உயர்ந்த பொருட்களினால் செலவுகள் இருக்கும். ஓய்வில்லாமல் உழைத்தால் பணியில் முன்னேற்றம் காணப்படும். பொறுப்புணர்ந்து செயல்படுவதால் வியாபாரத்தில் நஷ்டங்களை தவிர்த்துவிடலாம். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள்.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |