இன்றைய பஞ்சாங்கம்
01-03-2020, மாசி 18, ஞாயிற்றுக்கிழமை,
சஷ்டி பகல் 11.16 வரை பின்பு வளர்பிறை சப்தமி.
பரணி நட்சத்திரம் காலை 06.42 வரை பின்பு கிருத்திகை.
பிரபலாரிஷ்ட யோகம் காலை 06.42 வரை பின்பு சித்தயோகம்.
நேத்திரம் – 1. ஜீவன் – 1/2.
கிருத்திகை.
முருக வழிபாடு நல்லது
இராகு காலம் – மாலை 04.30 – 06.00,
எம கண்டம் – பகல் 12.00 – 01.30,
குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30,
சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,
இன்றைய ராசிபலன்
மேஷம்
இன்று தொழில் சிறந்த அளவில் இருக்கும். புதிதாய் பொருட்கள் வாங்கும் முயற்சி வெற்றியை கொடுக்கும். பயணங்களினால் நன்மை நடக்கும். பிள்ளைகளினால் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடந்தேறும். எதிர்பாராத நேரம் பணவரவு இருக்கும். வீட்டு தேவைகள் அனைத்தும் நிவர்த்தி ஆகும். சுபகாரியங்கள் கைகூடி வரும்.
ரிஷபம்
இன்று உறவினர்களினால் இல்லத்தில் ஒற்றுமை குறைய வாய்ப்பு உள்ளது. உடல்நலத்தில் மந்தமான நிலை காணப்படும். செலவுகளைக் குறைப்பதால் நெருக்கடிகளை தவிர்த்திட முடியும். மனதில் உறுதியுடன் வரும் பிரச்சனைகளை எதிர் நோக்குவீர்கள். தொழிலில் பங்குதாரர்களை அனுசரித்துச் செல்வதால் நன்மை நடக்கும்.
மிதுனம்
இன்று இல்லத்தில் பொருளாதார நிலை சிறந்த அளவில் இருக்கும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். தொழில் தொடர்பான பயணங்களினால் நன்மை நடக்கும். எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
கடகம்
இன்று பணவரவு குறைந்த அளவிலேயே இருக்கும். வாகனங்களில் செலவுகள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் தேவையற்ற அலைச்சல் இருக்கும். தொழிலில் எதிர்பார்த்த லாபத்தை பெற மிகவும் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து நடந்துக் கொள்வார்கள். எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் நன்மை நடக்கும்.
சிம்மம்
இன்று எடுக்கும் அனைத்து முயற்சியும் உங்களுக்கு நன்மை பயக்கும். தொழிலில் பங்குதாரர்களுடன் ஒற்றுமை பலப்படும். பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். புதிதாய் பொருட்கள் வாங்குவதில் நாட்டம் செல்லும். நீண்ட நாட்களாக இருந்து வந்த கடன் பிரச்சினைகள் அகலும். இல்லத்தில் மகிழ்ச்சி கூடும்.
கன்னி
இன்று உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலையும் மனக் குழப்பத்துடன் செய்வீர்கள். வெளியிடங்களில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து விடவும். பிரச்சினைகள் குறைந்த வண்ணம் இருக்கும். எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் பிற்பகலுக்கு பின்னர் நல்ல பலன் கிட்டும்.
துலாம்
இன்று உங்கள் ராசியில் மதியத்திற்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் மன அழுத்தம் மற்றும் உளைச்சல் ஏற்படும். செய்யும் செயல்களில் காலதாமதம் காணப்படும். வியாபாரம் தொடர்பான முயற்சிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. மற்றவர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
விருச்சிகம்
இன்று மகிழ்ச்சி தரும் செய்தி வீடு தேடி வரும். உறவினர்களின் வருகையினால் மனம் ஆனந்தம் கொள்ளும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிமுகப்படுத்தி லாபத்தை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சிறந்த அளவில் இருக்கும். பூர்வீக சொத்துக்களால் நன்மை நடக்கும்.
தனுஷ்
இன்று செய்யும் அனைத்து செயலையும் மிகுந்த ஆர்வமுடன் செய்வீர்கள். தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்திருந்த உதவிகள் கிடைக்கப் பெறும். இல்லத்தில் சுபச்செலவுகள் அதிகரிக்கும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். தெய்வீக ஈடுபாடு ஆரோக்கிய பாதிப்புகள் குறைவடையும்.
மகரம்
இன்று உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறைய வாய்ப்புள்ளது. திருமணம் போன்ற சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் தடங்கல்கள் ஏற்படும். குடும்பத்தினருடன் மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். தொழில் தொடர்பாக வெளிவட்டார நட்பு விரிவடையும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த நன்மைகள் நடக்கும்.
கும்பம்
இன்று வரவுக்கு மேல் செலவுகள் இருக்கும். பிள்ளைகளினால் மனவருத்தங்கள் ஏற்படலாம். இல்லத்தில் இருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்வதால் வீண் பிரச்சினைகளை தடுத்துவிடலாம். இன்று நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். தொழிலில் செய்யும் புதிய மாற்றங்கள் முன்னேற்றத்தை கொடுக்கும்.
மீனம்
இன்று வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகளிடம் இருந்து வந்த கருத்து வேற்றுமை அகலும். வியாபார வளர்ச்சிக்காக போட்ட திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். புதிதாய் பொருட்கள் வாங்குவதில் நாட்டம் செல்லும். திருமணம் போன்ற சுபகாரிய பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்க நல்ல நாளாக அமையும்.