Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

நாளைய ( 04.03.2020 ) நாள் எப்படி இருக்கு ? ராசி பலன் இதோ ….!!

இன்றைய  பஞ்சாங்கம்

04-03-2020, மாசி 21, புதன்கிழமை,

நவமி பகல் 02.00 வரை பின்பு வளர்பிறை தசமி.

மிருகசீரிஷம் நட்சத்திரம் பகல் 11.23 வரை பின்பு திருவாதிரை.

நாள் முழுவதும் சித்தயோகம்.

நேத்திரம் – 2. ஜீவன் – 1/2.

இராகு காலம் மதியம் 12.00-1.30,

எமகண்டம் காலை 07.30-09.00,

குளிகன் பகல் 10.30 – 12.00,

சுப ஹோரைகள் காலை06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00

இன்றைய ராசிப்பலன் –  04.03.2020

மேஷம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி கொடுக்கக்கூடிய நிகழ்ச்சிகள் நடந்தேறும் பிள்ளைகளினால் பெருமை வந்து சேரும் திருமணம் போன்ற சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடிவரும்  ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். பழைய பாக்கிகள் இன்று வசூலாகும். வியாபாரம் தொடர்பாக நவீன கருவிகளை வாங்கும் அனைத்து முயற்சிகளும் இன்று வெற்றியை கொடுக்கும்.

ரிஷபம்

இன்று குடும்பத்தில் வரவுக்கு மேல் செலவுகள் ஏற்படும். உறவினர்கள் மூலம் மன வருத்தங்கள் ஏற்படலாம். விட்டுக்கொடுத்துச் செல்வதால் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்க முடியும். நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் குடும்பத்தினர் ஆதரவளிப்பார்கள். பணியில் வேலைப்பளு குறைவடையும்.

மிதுனம்

இன்று இல்லத்தில் சுப செலவுகள் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் மூலம் நன்மை நடக்கும் பிள்ளைகளின் உடல்நலம் சிறந்த அளவில் இருக்கும். பணியில் மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளால் லாபம் பெறுவீர்கள்.

கடகம்

இன்று உறவினர்களின் வருகையினால் செலவுகள் அளவுக்கதிகமாக இருக்கும். பணி நிமித்தமாக தேவையற்ற அலைச்சல் மற்றும் மன உளைச்சல் ஏற்படும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நன்மை கொடுக்கும். தொழிலில் எதிரிகளாக இருந்தவர் கூட இன்று நண்பர்களாக உதவி புரிவார்கள்.

சிம்மம்

 இன்று பொருளாதார நிலை சிறந்த அளவில் இருக்கும். குடும்பத்தினருடன் வெளியூர் பயணம் மேற்கொள்ளக் கூடும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உடன் ஒற்றுமையாக செயல்படுவதால் லாபம் அதிகரிக்கும். பணியில் இருந்த பொறாமைகள் மற்றும் போட்டிகள் மறைந்துவிடும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கப் பெறும்.

கன்னி

இன்று உறவினர்களின் வருகையினால் இல்லத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து நடந்துக்கொள்வார்கள். நண்பர்கள் உங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவார்கள். வியாபாரம் தொடர்பான பொருளாதாரம் சிறந்த அளவில் இருக்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும்.

துலாம்

இன்று இல்லத்தில் சிறிய பிரச்சினைகள் ஏற்படும் தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்க சில இடையூறுகள் ஏற்படக்கூடும். சிந்தித்து செயலாற்றும் பொழுது தேவையற்ற செலவுகளை குறைக்க முடியும். உறவினர்கள் மூலம் நன்மை நடக்கும். பணியில் முன்னேற்றம் காணப்படும்.

விருச்சிகம்

இன்று வியாபாரத்தில் டென்சன் மற்றும் அலைச்சல் அதிகரிக்கும். உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் நீடிப்பதால் வாகனங்களில் பயணிக்கும் போது எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. கொடுக்கல் வாங்கலில் மிகுந்த கவனம் அவசியம். மற்றவர்களின் விஷயங்களில் தேவையில்லாமல் தலையிடுவது நன்மை பயக்காது.

தனுசு

இன்று நீங்கள் செய்ய நினைத்த செயலை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். திருமணம் போன்ற சுப முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பிள்ளைகளிடம் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள்.

மகரம்

இன்று மனதில் உறுதியுடன் எந்த செயலையும் வெற்றிகரமாக முடித்து விடுவீர்கள். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி பொங்கும். பிள்ளைகள் படிப்பில் முன்னேற்றம் காண்பார்கள். பணி நிமித்தமாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள கூடும். நட்பு வட்டம் விரிவடையும். தொழிலில் லாபம் பெருகும். சேமிப்பு அதிகரிக்கும்.

கும்பம்

இன்று தொழிலில் பங்குதாரர்கள் மூலம் தேவையற்ற பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.  கொடுக்கல்-வாங்கலில் இழுபறியான சூழல் உருவாகும். பணவரவு குறைந்த அளவிலேயே இருந்தாலும் தேவைகள் அனைத்தும் நிறைவேறிவிடும்.  சிக்கனத்தை கடைப்பிடிப்பதால் கடன் பிரச்சனைகள் குறையும். நண்பர்களின் உதவியும் ஆதரவும் கிடைக்கும்.

மீனம்

இன்று இல்லத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். தொழிலில் தேவையற்ற பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். எந்த செயலையும் நிதானமாகச் செய்வது நல்லது.  பணியில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப்பெறும். நண்பர்கள் உதவி கரம் நீட்டுவார்கள்.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |