இன்றைய பஞ்சாங்கம்
06-03-2020, மாசி 23, வெள்ளிக்கிழமை,
ஏகாதசி பகல் 11.47 வரை பின்பு துவாதசி.
புனர்பூசம் நட்சத்திரம் பகல் 10.38 வரை பின்பு பூசம்.
சித்தயோகம் பகல் 10.38 வரை பின்பு மரணயோகம்.
நேத்திரம் – 2. ஜீவன் – 0.
ஏகாதசி. பெருமாள் வழிபாடு நல்லது.
சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் – பகல் 10.30-12.00,
எமகண்டம்- மதியம் 03.00-04.30,
குளிகன்காலை 07.30 -09.00,
சுப ஹோரைகள் -காலை 06.00-08.00, காலை10.00-10.30.மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00
இன்றைய ராசிப்பலன்
மேஷம்
இன்று இல்லத்தில் பொருளாதார நிலை குறைந்த அளவிலேயே இருக்கும். பெற்றோருடன் மனவருத்தங்கள் ஏற்படும் சூழல் உருவாகும். இல்லத்தில் தேவையற்ற வீண் வாக்குவாதங்கள் தவிர்க்கப்படவேண்டும். உறவினர்கள் மூலம் நன்மை நடக்கும். கடன் பிரச்சினைகள் அகலும்.
ரிஷபம்
இன்று காலையிலேயே மகிழ்ச்சி தரும் செய்தி வந்து சேரும். திருமணம் போன்ற சுப முயற்சிகளில் நல்ல பலன் கிடைக்கும். பொன் பொருள் சேர்க்கை மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கும். பணி தொடர்பாக வெளியூர் பயணம் மேற்கொள்ளக் கூடும். வியாபாரத்தில் புதிதாய் ஒப்பந்தங்கள் கைகூடி வரும்.
மிதுனம்
இன்று உடல்நலத்தில் மந்தமான நிலை காணப்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதால் சேமிப்பு குறைவடையும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். பணியில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழிலில் வெளியூர் பயணங்களால் லாபம் அதிகரிக்கும்.
கடகம்
இன்று இல்லத்தில் உள்ளவர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். உதவிகள் எந்தவித தடையுமின்றி கிடைக்கப்பெறும் நண்பர்களின் மூலம் நன்மை நடக்கும். பணியில் புதிய பொறுப்புகள் வந்து சேரும். வருமானம் அதிகரிக்கும்.
சிம்மம்
இன்று உறவினர்களால் தேவையற்ற கருத்து வேற்றுமை ஏற்படலாம். வெளியூர் பயணங்கள் மூலம் பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். பங்குதாரர்கள் அனுசரித்து செல்வதால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். சகோதர சகோதரிகளின் ஆதரவு கிடைக்கும்.
கன்னி
இன்று இல்லத்தில் சுப செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகள் படிப்பில் மிகுந்த ஆர்வம் கொள்வார்கள். வழக்கு தொடர்பான விஷயங்களில் வெற்றி கிடைக்கும். நண்பர்களின் ஆலோசனை தொழிலில் முன்னேற்றத்தைக் கொடுக்கும். பெரியவர்களின் நட்பு மனதிற்கு புது பலத்தைக் கொடுக்கும்.
துலாம்
இன்று எந்த செயலையும் மிகுந்த சுறுசுறுப்புடன் செய்து முடித்துக் காட்டுவீர்கள். தொழிலில் எதிர்பாராத அளவில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை அதிகரிக்கும். பொறுப்புணர்ந்து செயல்படுவதால் பெரிய மனிதர்களின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
விருச்சிகம்
இந்த இல்லத்தில் பொருளாதார நெருக்கடிகள் இருக்கும். உறவினர்களால் தேவையற்ற பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். பணியில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் அனைத்தும் விலகும். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணம் புதிய மாற்றத்தை கொடுக்கும்.
தனுசு
இன்று உடல்நலத்தில் சிறிய பிரச்சினைகள் ஏற்படும். செயல்களில் தாமதமான நிலை உருவாகும். இன்று உங்கள் ராசிகள் சந்திராஷ்டமம் நீடிப்பதால் நிதானத்துடன் செயல்படுவது அவசியம். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். புதிய முயற்சிகளை காலம் தள்ளி வைப்பது சிறந்தது.
மகரம்
இன்று திடீர் பணவரவுகள் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் நாட்டம் செல்லும். பணியில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் காணப்படும். பெண்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமையும். சுபகாரியங்கள் கைகூடி வரும்.
கும்பம்
இன்று இல்லத்தில் உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கப் பெறும். உடல் நலம் சிறந்த அளவில் இருக்கும். தெய்வீக தரிசனத்திற்காக தொலைதூர பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புகள் உருவாகும். உடன்பிறந்தவர்களால் நன்மை நடக்கும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் இணைவார்கள்.
மீனம்
இன்று உடல் நலத்தில் சிறிய பாதிப்புகள் ஏற்பட்டு விலகும். பிள்ளைகளினால் தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும். சிக்கனத்தைக் கடைபிடிப்பது நல்லது. பெரியவர்களின் ஆதரவு கிடைக்கும். சிந்தித்து செயல் படுவதன் மூலம் வியாபாரத்தில் முன்னேற்றத்தை காண முடியும். ஆன்மீக ஈடுபாடு நன்மையை கொடுக்கும்.