இன்றைய பஞ்சாங்கம்
07-03-2020, மாசி 24, சனிக்கிழமை,
துவாதசி காலை 09.29 வரை பின்பு வளர்பிறை திரியோதசி.
பூசம் நட்சத்திரம் காலை 09.05 ஆயில்யம்.
சித்தயோகம் காலை 09.05 வரை பின்பு மரணயோகம்.
நேத்திரம் – 2. ஜீவன் – 1.
சனி பிரதோஷம். சிவ – நவகிரக வழிபாடு நல்லது.
தனிய நாள்.
சுபமுயற்சிகளை தவிர்க்கவும்
இராகு காலம் – காலை 09.00-10.30,
எமகண்டம் மதியம் 01.30-03.00,
குளிகன்காலை 06.00-07.30,
சுப ஹோரைகள் –காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை05.00-07.00. இரவு 09.00-10.00.
இன்றைய ராசிப்பலன்
மேஷம்
இன்று பிள்ளைகள் மூலம் தேவையற்ற செலவுகள் ஏற்படும். புதிதாய் பொருட்கள் வாங்குவதினால் செலவுகள் அதிகரிக்கும். சிக்கனத்தை கடைபிடிப்பதால் கடன் பிரச்சனைகளை தவிர்க்கலாம். எதிர்பார்த்த இடத்திலிருந்து எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். பணியில் உயர்வு கிடைக்கும்.
ரிஷபம்
இன்று உறவினர்கள் மூலம் இல்லத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வியாபாரம் தொடர்பாக நவீன தொழில்நுட்ப கருவிகளை வாங்கும் முயற்சி நற்பலனை கொடுக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வீட்டின் தேவைகளை நிவர்த்தி ஆகும் பணியில் வேலைப்பளு குறைவடையும்.
மிதுனம்
இன்று செய்யும் அனைத்து செயல்களிலும் மந்தமான நிலையே காணப்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். மனதில் புதிய தெம்புடன் பிரச்சினைகள் அனைத்தையும் எதிர்கொள்வீர்கள். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். கடன் பிரச்சினைகள் தீர்ந்துவிடும். வியாபாரத்தில் சிறிய மாற்றங்களைச் செய்து லாபம் பெறுவீர்கள்.
கடகம்
இன்று எந்த செயலையும் துணிவுடன் செய்து முடிப்பீர்கள். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பெறும். தொழிலில் பங்குதாரர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். இல்லத்தில் நிம்மதி பெருகும் கடன் பாக்கிகள் வசூலாகும்.
சிம்மம்
இன்று பலவீனமாக தென்படுவீர்கள். வியாபாரம் தொடர்பாக தடைகள் இருந்தாலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கப்பெறும். இல்லத்தில் நிம்மதியற்ற சூழல் உருவாகும். பணியில் இருந்து வந்த பிரச்சனைகள் குறைந்து விடும். உறவினர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்று.
கன்னி
இன்று தனவரவு போதுமானதாக இருக்கும். உறவினர்கள் மூலம் சுபச்செலவுகள் ஏற்படும். நண்பர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பெறும். சொத்து தொடர்பான வழக்குகளில் வெற்றி கிடைக்கும். பொன் பொருள் வாங்கி சேர்ப்பீர்கள். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும்.
துலாம்
இந்த உடல் நலம் சீராகி புதிய புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கிவிடும். சுபகாரிய முயற்சிகள் நல்ல பலனைக் கொடுக்கும். பணியில் மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரம் தொடர்பாக புதிய ஒப்பந்தங்கள் கைகூடி வரும் வருமானம் அதிகரிக்கும்.
விருச்சிகம்
இன்று இல்லத்தில் இருப்பவர்களிடம் வீண் கருத்து வேற்றுமை ஏற்படும். தொழிலில் எதிர்பாராத இழப்புகளை சந்திக்க கூடும். பணியில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப்பெறும். இதுவரை இருந்துவந்த பிரச்சினைகள் குறைவடையும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள்.
தனுசு
இன்று எந்த செயலிலும் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் நீடிப்பதால் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. உடல்நலத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். புதிதாய் எந்த முயற்சியும் செய்யாமல் இருப்பது நன்று. வாகனங்களில் பயணிக்கும் பொழுது நிதானத்துடன் செல்லவும்.
மகரம்
இன்று பணவரவு தாராளமாக இருக்கும். இல்லத்தில் உறவினர்கள் வருகையினால் ஆனந்தம் பொங்கும். திருமணம் போன்ற சுப முயற்சிகளில் நல்ல பலன் கிடைக்கும். பணி தொடர்பாக வெளிவட்டார நட்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் கொடுக்கல்-வாங்கல் லாபகரமாக இருக்கும்.
கும்பம்
இன்று மனதில் புத்துணர்ச்சி ஏற்படும். நண்பர்களின் மூலம் வியாபாரம் முன்னேற்றம் அடையும். குடும்பத்தினருடன் வெளியூர் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புகள் அமையும். பெரிய மனிதர்களின் உதவியினால் வங்கிக்கடன் கிடைக்கப்பெறும். சகோதர சகோதரிகளால் நன்மை நடக்கும்.
மீனம்
இன்று தொழிலில் திடீர் செலவுகள் இருக்கும். எழுத்தில் பெற்றோரிடம் தேவையற்ற மன வருத்தங்கள் ஏற்படும். மன அமைதி குறையும் வாய்ப்பு உள்ளது. உத்தியோகத்தில் வெளியூர் தொடர்புகளால் நல்ல பலன் கிடைக்கும். பெரியவர்களின் ஆலோசனை புதிய நம்பிக்கையை கொடுக்கும்.