ராசி இன்றைய பஞ்சாங்கம்
03-03-2020, மாசி 20, செவ்வாய்க்கிழமை,
அஷ்டமி பகல் 01.50 வரை பின்பு வளர்பிறை நவமி.
ரோகிணி நட்சத்திரம் பகல் 10.31 வரை பின்பு மிருகசீரிஷம்.
அமிர்தயோகம் பகல் 10.31 வரை பின்பு சித்தயோகம்.
நேத்திரம் – 1. ஜீவன் – 1/2.
முருக வழிபாடு நல்லது.
சுபமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.
இராகு காலம் மதியம் 03.00-04.30,
எமகண்டம் காலை 09.00-10.30,
குளிகன்மதியம் 12.00-1.30,
சுப ஹோரைகள் காலை8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
இன்றைய ராசிப்பலன்
மேஷம்
இன்று பணப்புழக்கம் குறைவாகவே இருக்கும். பணியில் தேவையற்ற பிரச்சினைகள் வந்து சேரும். சிக்கனத்தை கடைப்பிடிப்பதன் மூலம் பணப் பற்றாக்குறையை தவிர்க்கலாம். வியாபாரத்தில் சிறிய மாற்றங்களை செய்தால் லாபத்தை பெற முடியும். நண்பர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும்.
ரிஷபம்
இன்று எந்த செயலையும் துணிச்சலுடன் செய்து முடிப்பீர்கள். இல்லத்தில் கணவன் மனைவி இடையே ஒற்றுமை சிறந்த அளவில் இருக்கும். உறவினர்களின் உதவியால் சுபகாரியங்கள் கைகூடி வரும். தொழிலில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பால் நன்மை நடக்கும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளக் கூடும்.
மிதுனம்
இன்று பொருளாதாரம் தொடர்பாக நெருக்கடிகள் ஏற்படும். நண்பர்கள் வழியில் எதிர்பார்த்த காரியங்கள் இன்று ஏமாற்றத்தையே கொடுக்கும். உடல் நலத்தில் பிரச்சினைகள் தோன்றி மறையும். உங்கள் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் உதவிகள் கிடைக்கப் பெறும்.
கடகம்
இன்று இல்லத்தில் பொருளாதார நிலை சிறந்த அளவில் இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் காணப்படும். தொழில் தொடர்பாக வெளியூர் செல்ல நேரிடும். மாணவர்களுக்கு திறமைகளை வெளிக்காட்டும் நாளாகவே இன்றைய நாள் அமையும். ஆன்மீக ஈடுபாடுகள் அதிகரிக்கும்.
சிம்மம்
இன்று நினைத்த செயலை நினைத்த மாதிரி செய்து முடிப்பீர்கள். சகோதர சகோதரிகளின் மூலம் நற்செய்திகள் கிடைக்கப் பெற்று ஆனந்தம் கொள்வீர்கள். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் தொடங்கும் முயற்சிகள் நல்ல பலனைக் கொடுக்கும்.
கன்னி
இன்று உடல்நிலையில் சற்று மந்தமான நிலையே காணப்படும். உணவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்கவும். பணவரவு அதிக அளவில் இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் அதிகரிக்கும். வீட்டில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நன்மை கொடுக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் உதவியினால் லாபம் பெருகும்.
துலாம்
இன்று நீங்கள் மிகுந்த மனக்குழப்பத்துடன் காணப்பவீர்கள். அடுத்தவர்களிடம் தேவையில்லாமல் கோபம் கொள்ளும் சூழல் உருவாகும். உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் நீடிப்பதால் அடுத்தவர்களின் பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. தொலைதூரப் பயணங்கள் மேற்கொள்ளும் பொழுது கவனமுடன் இருப்பது சிறப்பு.
விருச்சிகம்
இன்று இல்லத்தில் தனவரவு சிறந்த அளவில் இருக்கும். உடல் நலத்தில் முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கப் பெறும். தொழிலில் எதிரிகளும் இன்று நண்பர்களாகவே உதவி புரிவார்கள். பணியில் சக பணியாளர்களால் நன்மை நடக்கும்.
தனுசு
இன்று உடல் ஆரோக்கியம் சிறந்த அளவில் இருக்கும். மிகவும் புத்துணர்ச்சியுடனும் சுறுசுறுப்புடனும் இருப்பீர்கள். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் காணப்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பழைய நண்பர்களின் சந்திப்பு ஆனந்தத்தைக் கொடுக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும்.
மகரம்
இன்று உங்களுக்கு பணி தொடர்பாக வீண் அலைச்சல்கள் மற்றும் பண விரயங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எதிர்பார்த்திருந்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். உடன்பிறந்தவர்களை அனுசரித்துப் செல்வதால் நன்மைகள் நடக்கும். இன்று கடன் பிரச்சனைகள் தீர்வுக்கு வரும். உடல் நலத்தில் மிகுந்த கவனம் தேவை.
கும்பம்
இன்று கைக்கு கிடைக்க வேண்டிய பணவரவுகளில் தாமதங்கள் இருக்கும். பிள்ளைகளினால் தேவையற்ற செலவுகள் ஏற்படும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளும் பொழுது மிகுந்த கவனம் தேவை. உறவினர்கள் பொருளாதார பிரச்சினைகளிலிருந்து விடுபட உதவி புரிவார்கள். நிதானத்துடன் செயல்படுவது நன்மை கொடுக்கும்.
மீனம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். உடல் நலம் சிறந்த அளவில் இருக்கும். தொழில் தொடர்பாக எடுக்கும் அனைத்து முயற்சிகளும் நற்பலனை கொடுக்கும். பூர்வீக சொத்துக்களில் நன்மை நடக்கும். கொடுக்கல் வாங்கல் லாபம் கொடுக்கும். புதிதாய் பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள்.