இன்றைய பஞ்சாங்கம்
18-02-2020, மாசி 06, செவ்வாய்க்கிழமை,
தசமி பகல் 02.33 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி.
மூலம் நட்சத்திரம் பின்இரவு 06.06 வரை பின்பு பூராடம்.
அமிர்தயோகம் பின்இரவு 06.06 வரை பின்பு சித்தயோகம்.
நேத்திரம் – 1. ஜீவன் – 1/2.
முருக வழிபாடு நல்லது.
இராகு காலம் மதியம் 03.00-04.30,
எம கண்டம் காலை 09.00-10.30,
குளிகன் மதியம் 12.00-1.30,
சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
மேஷம்.
இன்று புதிய தெம்புடன் பொலிவுடனும் இருப்பிர்கள். பணியில் சிலருக்கு வெளியூர் பயணம் செல்ல வேண்டிய நிலை உருவாகும்.. திருமணம் போன்ற சுப முயற்சிகளில் முன்னேற்றமான நிலை காணப்படும் நண்பர்களின் உதவியினால் தொழிலில் இருந்த அனைத்து பிரச்சினைகளும் அகலும். சேமிப்பு அதிகரிக்கும்
ரிஷபம்
தேவையற்ற கவலையினால் மனதில் குழப்பம் ஏற்படும். உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் நிலை ப்பதால் வாகனங்களில் பயணிக்கும் போது கவனமுடனிருப்பது நல்லது. மற்றவர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவியிற்பது நல்லது .பணியில் இருப்பவர்களுக்கு பணியில் இருப்பவர்கள் மிகவும் கவனத்துடன் செயல்படவும்.
மிதுனம்
இன்று எந்த செயலை செய்தாலும் மனதில் உறுதியுடன் செயல்படுவீர்கள். இல்லத்தில் மகிழ்ச்சி நிறைந்த சூழல் நிலவும். பிள்ளைகள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். சொத்து தொடர்பான வங்கி கடன்கள் இன்று கிடைக்கும் . சொத்து தொடர்பான வழக்கு விஷயங்களில் வெற்றி கிடைக்கும். புதிதாய் பொருட்கள் வாங்கி சேர்ப்பீர்கள். கடன் பிரச்சினை அகலும்.
கடகம்
இன்று பணம் வரவு சிறந்த அளவில் இருக்கும். இல்லத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் இன்று குறைவடையும். பிள்ளைகளினால் மகிழ்ச்சி கூடும். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த கடன் கிடைக்கப்பெறும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். புதிதாய் பொருட்கள் வாங்கி சேர்ப்பீர்கள் சேமிப்பு அதிகரிக்கும்.
சிம்மம்
இன்று வியாபாரம் சிறந்த முறையில் நடைபெறும். எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்து வந்த கருத்து வேற்றுமை அகலும். திருமணம் போன்ற சுப செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பணியில் இருப்பவர்கள் சக ஊழியர்களினால் நற்பலன் கிடைக்கப்பெறுவீர்கள்.
கன்னி
இன்று பிள்ளைகளினால் தேவையற்ற அலைச்சல் இருக்கும். பணியில் மேல் அதிகாரிகளுடன் கருத்து வேற்றுமை வந்து அகலும். விட்டுக்கொடுத்துச் செல்வதால் பிரச்சினைகளை தவிர்த்து விடலாம். தொழில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். புதிதாய் பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள்.
துலாம்
இன்று பணவரவு அளவுக்கதிகமாக இருக்கும். புதிதாய் பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். பணியில் சக ஊழியர்களிடம் ஒற்றுமை குணம் வெளிப்படும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். புதிய முயற்சிகளைத் தொடங்க நல்ல நாளாக அமையும்.. தொழிலில் முன்னேற்றம் காணப்படும்.
விருச்சிகம்
இன்று இல்லத்தில் உறவினர்களால் தேவையற்ற செலவுகள் ஏற்படும். பெரியவர்களின் விரோதத்திற்கு நீங்கள் ஆளாக கூடும். அலுவலகத்தில் உடன் பணி புரிபவர்களினால் மன வருத்தங்கள் ஏற்படும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நன்மை கொடுக்கும். நண்பர்களின் உதவிகள் கிடைக்கும்.
தனுசு
இன்று பணியாளர்களுக்கு வேலையில் மகிழ்ச்சி தரும் மாற்றங்கள் ஏற்படும். உறவினர்களால் நன்மை நடக்கும். பணம் பல வழிகளில் வந்து சேரும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தொழிலில் இருந்து வந்த போட்டி பொறாமைகள் அகலும். திருமணம் போன்ற சுப முயற்சிகளில் முன்னேற்றமான நிலை காணப்படும்.
மகரம்
இன்று எதிர்பாராத செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடன்பிறந்தவர்களுடன் சிறிய மன வருத்தங்கள் தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் கவனத்துடன் இருங்கள். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளிடமிருந்து வந்த கருத்து வேற்றுமை அகன்று ஒற்றுமை அதிகரிக்கும்.
கும்பம்
இன்று மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடந்தேறும். பிள்ளைகள் படிப்பில் ஈடுபாட்டுடன் செயல்படுவார்கள். பணியில் சிலருக்கு திறமைக்கேற்ற பதவி உயர்வுகள் கிடைக்கப்பெறும். தொழிலில் இருந்து வந்த போட்டி பொறாமைகள் அகலும். புதிதாய் வாகனம் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.
மீனம்
இன்று எந்த செயலையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளினால் ஏற்பட்ட மன வருத்தம் நீங்கும். உறவினர்களின் வருகையினால் இல்லத்தில் மகிழ்ச்சி கூடும். மேலதிகாரிகளால் திறமைகள் பாராட்டப்படும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும்.