Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

நாளைய ( 19.02.2020 ) நாள் எப்படி இருக்கு ? ராசி பலன் இதோ ….!!

இன்றைய  பஞ்சாங்கம்

19-02-2020, மாசி 07, புதன்கிழமை,

ஏகாதசி பகல் 03.02 வரை பின்பு தேய்பிறை துவாதசி.

நாள் முழுவதும் பூராடம் நட்சத்திரம்.

நாள் முழுவதும் அமிர்தயோகம்.

நேத்திரம் – 0. ஜீவன் – 1/2.

ஏகாதசி. பெருமாள் வழிபாடு நல்லது.

இராகு காலம் மதியம் 12.00-1.30,

எம கண்டம் காலை 07.30-09.00,

குளிகன் பகல் 10.30 – 12.00,

சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00

இன்றைய ராசிபலன்

மேஷம்

இன்று பணியில் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். மிகுந்த உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். பெரியவர்களின் சந்திப்பின் மூலம் நன்மை நடக்கும். பிள்ளைகள் இன்று படிப்பில் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள். வெளியூர் பயணங்களின் மூலம் வியாபாரத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். பூர்வீக சொத்து தொடர்பாக நல்ல பலன் கிடைக்கும்.

ரிஷபம்

இன்று மிகுந்த மனக் குழப்பத்துடன் காணப்படுவீர்கள். உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் நிலைப்பதால் செய்யும் அனைத்து செயல்களிலும் தடை உண்டாக வாய்ப்புகள் உள்ளது. அடுத்தவர்களை நம்பி எந்த காரியத்திலும் ஈடுபட வேண்டாம். பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. வெளியூர் பயணங்களை தவிர்க்கவும்.

மிதுனம்

இன்று பிள்ளைகள் மூலம் நற்செய்திகள் வீடு வந்து சேரும். உடன்பிறந்தவர்களுடன் இருந்து வந்த கருத்து வேற்றுமை அகன்று ஒற்றுமை அதிகரிக்கும். உத்யோகம்  தொடர்பாக வெளி மாநிலத்தவர்களின் நட்பு கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். திருமணம் போன்ற சுப முயற்சிகளுக்கான பேச்சுவார்த்தைகள் நல்லமுறையில் முடியும்.

கடகம்

இன்று இல்லத்தில் சுப நிகழ்வுகள் நடந்தேறும். பணியில் மேலதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். குடும்பத்தின் தேவைக்கேற்றவாறு வருமானம் அதிகரிக்கும். தொழிலில் புதிய பங்குதாரர்களின் அறிமுகம் கிடைக்கும். வெளியூர் பயணிக்க வேண்டிய சூழல் ஏற்படும். உடல் நலம் சிறந்தஅளவில் இருக்கும்.

சிம்மம்

இன்று மகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடந்தேறும். உடன்பிறந்தவர்கள் மூலம்  நன்மை நடக்கும். இல்லத்தில் உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி கூடும். உடல் ஆரோக்கியம் சிறந்த அளவில் இருக்கும். புதிதாய் பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரம் தொடர்பாக புதிய ஒப்பந்தங்களில் வெற்றி கிடைக்கும்.

கன்னி

இன்று உடல் நலத்தில் சிறிய பாதிப்புகள் ஏற்படலாம். இல்லத்தில் சிறிய சஞ்சலங்கள் இருக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனமுடனிருப்பது நல்லது. பணியில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கப்பெறும். தொழிலில் பங்குதாரர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வியாபாரத்தின் முன்னேற்றத்தை காணலாம்.

துலாம்

இன்று செய்யும் அனைத்து செயலையும் துணிச்சலுடன் செய்து காட்டுவீர்கள் பணியில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். திருமணம் போன்ற சுப முயற்சிகளில் இருந்து வந்த தடைகள் அகலும். வங்கியில் சேமிப்பு அதிகரிக்கும். இன்று வருமானம் அதிகமாவதற்கான வாய்ப்புகள் வாய்க்கப் பெறும். புதிதாய் வாகனம் வாங்குவதில் ஆர்வம் கூடும்.

விருச்சிகம்

இன்று இல்லத்தில் உறவினர்களின் வருகையினால் ஆனந்தம் பொங்கும். இருந்தாலும் செலவுகள் அதிகமாக இருக்கும். அனுபவசாலிகளின் ஆலோசனை தொழிலின் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யும். சிக்கனத்துடன் செயல்படுவதால் பொருளாதார சிக்கலை சமாளித்துவிடலாம். உடல்நலனில் கவனமுடனிருப்பது நல்லது.

தனுசு

இன்று இல்லத்தில் ஒற்றுமையான சூழல் நிலவும். உறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு பக்கபலமாக இருப்பார்கள். எதிர்பார்த்து இருந்த இடத்தில் இருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப் பெறும். பூர்வீக சொத்துக்களின் மூலம் நன்மை நடக்கும். புதிய தொழில்நுட்பங்கள் மூலம் வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள்.

மகரம்

இன்று எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெறுவீர்கள். எதிலும் சிந்தித்து செயல்படுவது நன்மையை கொடுக்கும். இல்லத்தில் பெற்றோருடன் சிறிய கருத்து வேற்றுமை ஏற்பட்டு அகலும். பணியில் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வதால் நல்ல பலன் கிடைக்கப்பெறும். எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது.

கும்பம்

இன்று இல்லத்தில் பொருளாதார சூழல் சிறந்த அளவில் இருக்கும். சிலர் கல்வி தொடர்பாக வெளியூர் செல்ல வேண்டி வரும். வியாபாரத்தில் பல போட்டிகளை தாண்டி வெற்றி பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு  உடன் பணிபுரிபவர்கள் உதவியாக இருப்பார்கள். வருமானம் அதிகரிக்கும்.

மீனம்

இன்று கடினமாக உழைத்து பணியில் வெற்றி காண்பீர்கள். இல்லத்தில் உங்களுக்கு சாதகமற்ற நிலை காணப்படும். விட்டு கொடுத்து செல்வதால் பிரச்சினைகளை தவிர்க்க முடியும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை கொடுக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும்.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |