Categories
அரசியல் மாநில செய்திகள்

நாக்கை மடக்கி பேசுங்க ….. ”நாக்குக்கு ஆபத்து”….. சீமானுக்கு எச்சரிக்கை ….!!

சீமான் நாக்கை மடக்கி பேச வேண்டும் இல்லையென்றால் நாக்குக்கு ஆபத்து என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அங்கு பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர், ”முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியைக் கொன்றது சரிதான். ஒருகாலம் வரும். அப்போது வரலாறு திருப்பி எழுதப்படும். என் இன மக்களைக் கொன்று குவித்த ராஜிவ் காந்தி என்ற எதிரியை தமிழர் தாய் நிலத்தில் கொன்று புதைத்தோம் என்ற வரலாறு வரும்” என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.சீமானின் இந்தக் கருத்துக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் பலரும் எதிர்ப்புத் தெரிவித்துவந்த நிலையில் ஆங்காங்கே காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் சீமானின் பேச்சுக்கு விக்கிரவாண்டி காவல்நிலையத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழக தலைமை தேர்தல் ஆணையமும் காங்கிரஸ் கட்சியின் புகாரை அடுத்து சீமானின் பேச்சு குறித்து விரிவான அறிக்கை கேட்டுள்ளது. இந்நிலையில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்யும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறுகையில் , சட்டமன்ற இடைத்தேர்தல் இரண்டு தொகுதிகளிலும் அதிமுக_தான் வெற்றி பெறும் . சசிகலா_வை அதிமுகவில் இணைப்பது குறித்து கட்சி தலைமை தான் முடிவு செய்யும் . கட்சியின் நலனுக்காக எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதை ஏற்பேன் என்று கூறிய அமைச்சர் நாக்கை மடக்கி பேச வேண்டும் இல்லையென்றால் நாக்குக்கு ஆபத்து என்று தெரிவித்தார்.

Categories

Tech |