Categories
உலக செய்திகள்

மணிக்கணக்கில்… நீண்ட வரிசையில் சாப்பாட்டுக்காக நிற்கும் மக்கள்!

தொடர் ஊரடங்கால் வறுமையில் இருக்கும் தென்னாப்பிரிக்க மக்கள் உணவுக்காக இரண்டரை மைல் தூரம் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது

கொரோனா தொற்று பரவலின் காரணமாக உலகம் முழுவதும் பல நாடுகளில் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வேலை இன்றி பல மக்கள் வறுமையில் வாடி வருகின்றனர். அவ்வகையில் தென்னாப்பிரிக்காவில் ஊரடங்கினால் வறுமையில்  சிக்கியிருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் இரண்டரை மைல் தூரத்திற்கு வரிசையில் உணவுக்காக வெகுநேரம்  காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஜோகன்னஸ்பர்க்கிற்கு மிகவும் அருகில் அமைந்த செஞ்சுரியன் நகரில் ஐந்து வாரங்களுக்கு மேலாக ஊரடங்கு நடவடிக்கைகள் தொடர்ந்துள்ளது. இதனால் ஒரு வேளை உணவுக்காக தொழிலின்றி நலிந்த ஏழை மக்கள் பல மணி நேரம் காத்திருக்கும் கொடிய சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் முய்ப்பிலாஸ் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்று நன்கொடையாக 8000 உணவு பெட்டிகளை வழங்க உள்ளது.

பொருளாதார ரீதியாக அதிகளவில் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்களுக்கு  8000 உணவு பெட்டிகள் என்பது மிகவும் குறைந்த அளவு என கூறப்பட்டுள்ளது. மக்களுக்கு கொடுப்பதாகக் கூறிய 8000 உணவு பெட்டிகளையும் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்களே தயார் செய்துள்ளனர். உணவு சார்ந்த உதவிகள் அனைத்தும் அரசு மூலம் உதவிகள் பெறமுடியாத தென்னாப்பிரிக்கர் அல்லாத மக்களுக்கே கொடுக்கப்படுகின்றது.

Categories

Tech |