ஒருசிலருக்கு காலை எழுந்ததும் டீ குடித்தால் தான் அன்றைய நாள் சிறப்பாக இருக்கும் என்று எண்ணுவர். ஆனால் அதிகமாக டீ குடிப்பதால் சில பக்க விளைவுகள் ஏற்படும். நாளொன்றுக்கு 3 டீக்கும் மேல் குடித்தால் பக்க விளைவுகள் ஏற்படும் என்பதை உங்கள் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
என்னென்ன பிரச்சினைகள் ஏற்படும்:
தூக்க கோளாறு:
டீயில் காஃபின் அதிகமாக உள்ளதால் லேசான டையூரிடிக் விளைவு ஏற்படுகிறது. இதனால் தூக்கக் கோளாறுகள் ஏற்படும்.
மலச்சிக்கல்:
டீ யில் தியோபிலின் என்ற வேதிப்பொருள் உள்ளது இது செரிமான பிரச்சினையை ஏற்படுத்தி மலச்சிக்கலை ஏற்படும். காலையில் தேநீர் உட்கொள்வதால் மலம் வரும் என்று சிலர் நம்புகின்றனர். ஆனால் அதிக அளவில் தேனீர் குடிப்பதால் மலச்சிக்கலும் ஏற்படும்.
கருசிதைவுக்கு சாத்தியம்
பெண்கள் தேயிலை முழுவதையும் தவிர்க்க வேண்டும். இதில் உள்ள காபின் என்ற பொருள் கருவின் வளர்ச்சிக்கு தீங்கு விளைவிக்கும்.
கவலை மற்றும் அமைதியின்மை
Caffeine மனநிலையை மேன்படுத்த அதிகரிக்கும் மருந்துகளில் ஒன்றாகும், மேலும் இது நம் உடலில் சில நல்ல மற்றும் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
முக்கிய ஊட்டச்சத்து குறைபாடுகளை ஏற்படுத்தக்கூடும்
அதிகமாக உட்கொள்வது இரும்பு(Iron) போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை உடலால் உறிஞ்சுவதைத் தடுக்கக்கூடும்.” சில ஆய்வுகள் கருப்பு தேயிலை (Blackw டீ ) இரும்பு உறிஞ்சுதலைக் குறைக்கும் என்று காட்டுகின்றது.