Categories
அரசியல் மாநில செய்திகள்

லோன் கட்ட ரூ.25,000 எடுத்து வச்சு…. 7 வருஷமா கடன் அடைந்த அண்ணாமலை….!!

தமிழக பாஜக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் அண்ணாமலை, இன்னைக்கு முதலமைச்சரிடம் சொல்லுறேன். ஐயா ஒரு சாதாரண குடும்பத்தில்…  ஒரு கிராமத்தில் பிறந்து… மக்களுடைய அன்பு – அரவணைப்பு –  ஆதரவில் படித்து, அதன் பின்பு இன்ஜினியரிங் முடித்து,  மேனேஜ்மென்ட் முடித்து…

சிவில் சர்வீஸ் எக்ஸாம் பாஸ் பண்ணி,  ஐ.பி.எஸ் ஆகி விட்டேன் ஐயா. ஆனால் அது முக்கியமில்லை.  நான் MBAக்கு வாங்கின கடனை கட்டி முடிப்பதற்கு  7 வருடம் ஆச்சு. கவர்மெண்ட்டில் சம்பளம் கம்மியா தான் வரும். 60 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை எஸ்.பி,  எஸ்.பி ஆக இருக்கும் போது வரும்.

அதில் குடும்பச் செலவுக்கு  40,000 போய்விடும். மாதமாதம் வாங்கிய லோன் எம்பிஏ படிக்கும் போது… இன்ஜினியரிங் படிக்கும் போது வாங்கிய லோனை கட்டுவதற்கு 25 ஆயிரம் போய்விடும். அதை ஒதுக்கி வைத்து,  ஒதுக்கி வைத்து,  ஏழு வருடம் ஒதுக்கி வைத்து நான் வாங்கியுள்ள லோனை கட்டிட்டேன்.. இன்னிக்கு வந்திருக்கிறேன்.

எனக்கு தெரியும். இவை அனைத்துமே நீங்க வச்சிருக்கிற ரேஞ்ச் ரோவர் காருக்கு டயர் மாத்துற  காசு. இது பெரிது இல்லை..  நான் வாங்கிய லோன்,  அதை கட்டியது,  கஷ்டப்பட்டது உங்க பட்டத்து இளவரசர் காருக்கு ரெண்டு டயரை மாத்துனீங்கனா…. அந்த பணத்திற்கு சரியா போயிடும். அதனால உங்களுக்கு என்ன பிரச்சனை ? என்று தெரியாமல் திமுககாரனுக்கு  கேட்கிறேன் என தெரிவித்தார்.

Categories

Tech |