Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

பல் வலி, பல் சொத்தை குணமாக்க…. மூலிகை பற்பொடி…. எப்படி செய்வது….?

வீட்டிலேயே மூலிகை பற்பொடி எப்படி செய்வது என்பதை குறித்து இதில் தெரிந்து கொள்வோம்.

மூலிகை பற்பொடி:

விதை நீக்கிய கடுக்காய் 10 கிராம்

தான்றிக்காய் 10 கிராம்

சுக்கு 10 கிராம்

மிளகு 10 கிராம்

மாசிக்காய் 10 கிராம்

அதிமதுரம் 10 கிராம்

காசு கட்டி 20 கிராம்

ஏலக்காய் 20 கிராம்

மருதம் பட்டை 100 கிராம்

இந்துப்பூ 10 கிராம்

இவை அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் பொடியாக கிடைக்கும் இவற்றை தனித்தனியாக சலித்து ஒன்றாக சேர்த்து பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளவும்

இவற்றை கொண்டு இருவேளையும் பல் துலக்கி வர பல்வலி, பல்லசைவு, ஈறுவீக்கம், பற்சொத்தை முதலியன பிரச்சினைகள் தீர்ந்து பற்கள் வலிமை பெறும். இயற்கைக்கு மாறுவோம் இன்பமாக வாழ்வோம்!

Categories

Tech |