தினசரி உணவில் பூண்டு எடுத்துக் கொண்டால் என்னென்ன பயன்கள் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.
பூண்டுச் சாற்றையும், இஞ்சிச் சாற்றையும் சம அளவு எடுத்துக்கொண்டு காலையும் மாலையும் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர நெஞ்சுக் குத்து நீங்கும்.
பூண்டை பொடி செய்து தேனில் குழைத்து முடி வளராமல் இருக்கும் இடத்தில் தேய்த்து வர முடி வளரும்.
பூண்டைப் பச்சையாகச் சாப்பிட்டால் வாத நோய் குணமாகும். அரைக்கீரையோடு பூண்டு, சீரகம், பச்சை மிளகாய்ச் சேர்த்து புளி சேர்க்காமல் சமைத்துச் சாப்பிட வாயுத் தொல்லை நீங்கும்.
பச்சைப் பூண்டை உண்பதால் உடல் பலம் பெறும். அஜீரணத்தால் ஏற்படும் வயிற்று வலி மறையும். புளிப்பால் உண்டாகும் எரிச்சல் நீங்கும். ரத்த அழுத்தம் குறையும்.
பூண்டு, மிளகு, கரிசலாங்கண்ணிக் கீரை மூன்றையும் அரைத்துக் காலையில் சாப்பிட்டு வர ரத்தசோகை நீங்கும்.
பூண்டை நசுக்கி சுண்ணாம்பு நீரில் நனைத்து கட்ட நகச்சுற்றி குறையும். பூண்டையும் துத்தி இலையையும் சேர்த்து லேசாக நசுக்கி நல்லெண்ணையில் போட்டுக் காய்ச்சி வந்தால் உடல்வலி குறையும்.
காய்ச்சிய பாலில் இரண்டு அல்லது மூன்று பல் பூண்டைப் போட்டுப் பருக நன்கு தூக்கம் வரும்.
பூண்டு, மிளகு, துத்தி இலைகளை ஒவ்வொன்றும் 50 கிராம் வீதம் எடுத்து, இத்தோடு 15 கிராம் வசம்பு சேர்த்து நன்றாக அரைத்துப் பெண்கள் சூதக காலத்தில் சாப்பிட சூதக வலி வராது.