பல் வழியை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து குணமாக்குவது மிக எளிது.
பல் வலி ஒரு தடுக்கக்கூடிய பிரச்சினையே என்றாலும் இதை முழுமையாக தவிர்க்க முடியாது. இருப்பினும், இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது பல் வலியை குறைக்க உதவும்.
- பற்பசையுடன் ஒரு நாளைக்கு பற்களை இரண்டு முறை துலக்கவும்
- அடிக்கடி வாய் கொப்பளிப்பது உங்கள் பற்களில் உள்ள துகள்களை அகற்றும்
- பல் சிதைவதைத் தடுக்க சர்க்கரை உணவுகளைக் குறைக்கவும்
- முறையான துப்புரவுக்காக உங்கள் பல் மருத்துவரை தவறாமல் பார்வையிடவும்
மேலும் வீட்டில் இருந்தபடியே பல் வலிக்கான தீர்வுகளை எளிய முறையில் காணலாம்.
உப்பு மற்றும் மிளகை சமமாக எடுத்து இந்த கலவையை ஒரு பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவும்.
இதனை பாதிக்கப்பட்ட பல்லில் நேரடியாகப் போட்டு சிறிது நேரம் விட்டுவிட வேண்டும்.
வலி அல்லது வீக்கம் குறையும் வரை தினமும் 1-2 முறை தவறாமல் செய்ய வேண்டும்.
பல் வலிக்கு இது சிறந்த தீர்வாகும்.