தஞ்சை மாவட்டம் திருவோணத்தில் காவல்துறையினரை கத்தி மற்றும் கட்டையை காட்டி மிரட்டியும் பல்லால் கடித்து காயப்படுத்தியும் தப்பி ஓடிய கள்ளச்சாராய வியாபாரிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த திருவோணம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்ப்பதாக அருண்பாண்டியன், இளங்கோவன் ஆகியோர் பற்றிய தகவல்காவல்துறையினருக்கு தெருவிக்கப்பட்டது. அதனையடுத்து அருண்பாண்டியன் மற்றும் இளங்கோவன் ஆகிய இருவரும் ஒரு திருமணத்தில் கலந்து கொள்ள இருப்பதை அறிந்து அங்கு சென்ற காவல் துறையினர் அவர்களை பிடிக்க முயன்ற பொழுது அவர்கள் கட்டை மற்றும் கத்தியை காட்டி மிரட்டினர்.
மேலும் காவல்துறை அதிகாரிகளை பல்லால் கடித்ததில் தலைமை காவலர் செந்தில்குமார் ஆயுதப்படை காவலர் ஆல்வின் ஆகியோர் காயமடைந்தனர். காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தப்பியோடி தலைமறைவாக உள்ள இளங்கோவன் மற்றும் அருண்பாண்டியன் ஆகியோரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.