Categories
சினிமா

“உலகின் டாப் 10 அழகிகள்” பட்டியலில் இடம்பெற்ற ஒரே ஒரு இந்திய நடிகை…. ரசிகர்கள் வாழ்த்து….!!!!

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் பிளாஸ்டிக் சர்ஜியன் Julian de Shiva செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் வருடம்தோறும் உலகின் அழகான பெண்களின் பட்டியலை வெளியிடும். இந்த அழகான பெண்களை சயின்டிஃபிக் மெத்தேட் முறையை பயன்படுத்தி, யாருடைய முகம் மிகவும் பர்ஃபெக்டாக இருக்கிறது என்பதை பார்த்து தேர்வு செய்வார்கள். இந்த முறையில் கண், காது, மூக்கு, முக அமைப்பு என மொத்தம் 12 விஷயங்கள் ஆராயப்பட்டு கிரேக்கர்களின் கோல்டன் ரேஷியோ ஆப் பியூட்டி பிஹெச்-ஐ உடன் ஒப்பிட்டு அழகான பெண்களை தேர்வு செய்வார்கள். இந்நிலையில் நடப்பாண்டிலும் உலகின் அழகான 10 பெண்களின் லிஸ்ட்டை ஜூலியன் டி சிவா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி பிரபல ஹாலிவுட் நடிகை Jodie comer முதலிடத்தை பிடித்திருக்கிறார். இவருடைய முகம் 94.5% இருக்கிறதாம். மேலும் அழகான பெண்களின் லிஸ்டில் ஒரே ஒரு இந்திய நடிகையின் பெயர் மட்டும்தான் இடம் பெற்று இருக்கிறது.

அதாவது பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே அழகான பெண்களின் பட்டியலில் 9-வது இடத்தில் இருக்கிறார். மேலும் பட்டியலில் நடைபெற்ற டாப் 10 அழகான பெண்களின் விவரத்தை தற்போது பார்க்கலாம். அதன்படி முதலாவது இடத்தில் Jodie comer (94.52%), 2-வது இடத்தில் Zendaya (94.37%), 3-வது இடத்தில் Bella Hadid (94.35%), 4-வது‌ இடத்தில் Beyonce (92.44%), 5-வது இடத்தில் Ariana Grande (91.81%), 6-வது இடத்தில் Taylor Swift (91.64%), 7-வது இடத்தில் Jourdan Dunn (91.39%), 8-வது இடத்தில் kim kardashian (91.28%), 9-வது இடத்தில் தீபிகா படுகோனே (91.22%), 10-வது இடத்தில் Hoyeon jung (89.63%) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த பட்டியல் தற்போது இணையதளத்தில் வைரலாகி வரும் நிலையில் தீபிகா படுகோனேவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |