வாழ்க்கை அழகாக மாற செய்ய வேண்டிய நற்பண்புகள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
நீண்ட நாள் கழித்து உங்களது நண்பர்களையோ உறவினர்களையோ சந்தித்தால் அவர்களின் சம்பளம் வயது உள்ளிட்டவற்றை கேட்க கூடாது அவர்கள் சொன்னால் தவிர, இது அவர்களிடம் நாம் கேட்கும் போது ஒரு தப்பான அபிப்ராயத்தை அல்லது அவர்கள் மனதில் ஒருவிதமான கஷ்டத்தையும் ஏற்படுத்திவிடக் கூடும்.
தெருவில் யாராவது சந்திக்க நேர்ந்தால் ஸ்டைலுக்காக நீங்கள் கருப்பு கண்ணாடி அணிந்திருந்தால் கழற்றி விட்டு பேசவும். ஏனெனில் கண் பார்த்துப் பேசுதல் நம்பிக்கைக்கு நல்லது.
நண்பர்களிடமோ, யாரிடமோ நேரில் சந்தித்து பேசும்போது மொபைல் நோண்டி கொண்டிருக்கக் கூடாது ஏனெனில் உறவுகளைத் தவிர வேறு எந்த தொழில் நுட்பமும், சமூக வலைத்தளங்களும் சந்தோஷப்படுத்தி விடமுடியாது. இப்படி செய்வது அவர்களை அலட்சியப்படுத்துவது போலாகும்.
உங்களுக்கு பிடித்தவர்களாக இருந்தாலும் சரி, பிடிக்காதவர்கள் ஆக இருந்தாலும் சரி அவர்கள் கஷ்டத்தில் இருக்கும் போது அவர்கள் உங்களிடம் பகிர்ந்தால் மட்டும் அவர்களது கஷ்டத்தில் பங்கேற்று அவர்கள் கேட்டால் அறிவுரை வழங்குங்கள் இல்லையேல் அறிவுரை வழங்குவது பலருக்கு பிடிக்காது.
மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பளிக்க கற்றுக்கொள்ளுங்கள். அது மோசமாக இருந்தாலும் சரி அதை உங்களது பாதையில் சிறிதளவேனும் ஏற்றுக் கொள்ளப் பழகுங்கள்.
மற்றவர்கள் பேசும்போது குறுக்க பேசும் பழக்கத்தை விட்டுவிடுங்கள். அவர்கள் என பேச வேண்டிய அனைத்தையும் அவர்கள் பேசி முடித்த பின் உங்களது கருத்துக்களை நிதானமாக தெளிவாக சொல்லுங்கள்.
அதே போல் உங்கள் நண்பர்களோ உறவினர்களோ யாராக இருந்தாலும் சரி அவர்கள் மீது தவறு இருக்கிறது எனில், பொதுவில் அவர்களை குறை சொல்லாமல் புகழ வேண்டும். மாறாக தனிமையில் இருக்கையில் அவர்களை சுட்டிக்காட்டி தவறை திருத்திக்கொள்ள வலியுறுத்த வேண்டும்.
உங்களது நண்பர்களாக இருந்தாலும் சரி உறவினர்களாக இருந்தாலும் சரி அவர்கள் பிரச்சனையில் இருக்கிறார்கள் என்றால் நேரடியாக அவர்களது பிரச்சனைக்கு உதவ போய் நிற்காதீர்கள். ஒருமுறை செய்தால் பல முறை அவர்கள் எதிர்பார்ப்பார்கள். அவர்களது பிரச்சினைக்கு தோள் கொடுக்கும் சூழ்நிலை உங்களுக்கு எப்போதும் அமைந்திருகாது என்பதே நிதர்சனமான உண்மை. நீங்கள் உதவாத சமயத்தில் எத்தனை உதவி செய்தாலும் அதை கணக்கில் ஏற்று கொள்ள மாட்டார்கள்.
உங்களுக்கு மிக நெருக்கமான, நீங்கள் விரும்பும் ஒரே ஒரு நபரிடம் மட்டும் உங்களது துக்கத்தை பகிர தொடங்குங்கள். அந்த ஒரு நபரும் உங்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளிப்பவராக இருக்கிறார்களா என்பதையும் பார்த்துக் கொள்வது அவசியம்.