Categories
மாநில செய்திகள்

சென்னையில் முழுமையாக கண்காணிக்கப்பட உள்ள முக்கிய 22 பகுதிகள் – சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் 27 மாவட்டங்களில் 411 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 81 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

பகுதிகள் முழுமையாக கண்காணிக்கப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. எண்ணூர், வியாசர்பாடி, தண்டையார் பேட்டை, கொருக்குப்பேட்டை, பிராட்வே, ராயபுரம், புதுப்பேட்டை, பெரம்பூர், அரும்பாக்கம், அண்ணாநகர், அமைந்தகரை , புரசைவாக்கம், சாந்தோம், கோடம்பாக்கம், சைதாப்பேட்டை, மாம்பலம், போரூர், ஆலந்தூர், கோட்டூர்புரம், திருவான்மியூர், மடிப்பாக்கம், பனையூர் ஆகிய 22 பகுதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இந்த பகுதிகள் அனைத்தும் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளதாகவும், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரும் மிக மிக கவனமாக இருக்க வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |