கண்களில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை நாள்தோறும் செய்யக் கூடிய சிறு சிறு விஷயங்களை கொண்டு எப்படி தவிர்க்கலாம் என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
- அடிக்கடி கண்களை சிமிட்ட வேண்டும். இதனால் கண்களின் ஈரப்பதம் தக்க வைக்கப்பட்டு பார்வைத்திறனை பாதுகாக்கலாம்.
- தினமும் குறைந்தது இரண்டு முதல் இரண்டரை லிட்டர் தண்ணீர் அருந்துவது வறட்டு தன்மையிலிருந்து கண்களை பாதுகாக்கும்.
- கண்களை சிமிட்டுவது கண்களுக்கு வெளியே நாம் கொடுக்கும் சிறு பயிற்சி. அதேபோல் கண்களுக்குள் இருக்கக்கூடிய கருவிழிகளை அசைத்து எட்டு போட வேண்டும். இதை தொடர்ந்து பயிற்சி செய்தாலே பார்வை குறைபாடு சிறிது சிறிதாக சரியாகும்.
- முடிந்த அளவிற்கு வெளிச்சம் இல்லாமல் இருளாக இருக்கக்கூடிய பகுதியில் ஸ்மார்ட் போன், லேப்டாப், மடிக்கணினி, டிவி உள்ளிட்ட ப்ளூரே கதிர்கள் வரக்கூடிய திரைகளை பார்க்காமல் தவிர்ப்பது நல்லது.