Categories
உலக செய்திகள்

முடங்கிய உலகம்….. ஊரடங்கிலும் பண மழை….. லாபத்தில் செழிக்கும் டாப் 4 நிறுவனங்கள்….!!

ஊரடங்கு காலத்திலும் பண மழை பொழியும்  நிறுவனங்கள் குறித்த இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். 

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் அனைத்தும் ஒன்றாக கையில் எடுத்த ஒரு ஆயுதம் ஊரடங்கு உத்தரவு தான். பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள் பத்திரமாக தங்களது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு கொரோனாவிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு அனைத்து உலக நாடுகளின் அரசும் தங்களது மக்களை வலியுறுத்தி வந்தது.

ஊரடங்கினால் பொதுமக்கள் வீட்டிற்குள் இருப்பதால், பல தொழில்கள் முடக்கப்பட்டன, பலர் வேலையிழந்து வருமானம் இன்றி தவித்து வந்தனர். இந்த கொரோனாவால் உலகம் முழுவதும் பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்நிலையில் சில நிறுவனங்கள் மட்டும் இந்த சூழ்நிலையிலும் பல கோடிகளில் லாபம் அடைந்து உள்ளது. அவற்றின் பட்டியல்கள் பின்வருமாறு,

ஆப்பிள் நிறுவனம் ரூபாய் 4.40 லட்சம் கோடி, அமேசான் நிறுவனம் ரூபாய் 6.64 லட்சம் கோடி, பேஸ்புக் நிறுவனம் 1.39 லட்சம் கோடி, கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பஃபெட் ரூபாய் 2.40 லட்சம் கோடி என்ற அளவில் லாபம் ஈட்டியுள்ளது. ஊரடங்கு காலத்தில் பலர் வேலை இழந்து தவித்து வரும் இந்த சூழ்நிலையில் குறிப்பிட்ட நிறுவனங்கள் பணம் மழையில் நனைவது பொதுமக்களிடம் திகைப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

Categories

Tech |