Categories
அரசியல்

2022 -ஆம் ஆண்டில் விற்பனையில் மாஸ் காட்டிய டாப் 5 எம்.பி.வி கார்கள்… எதெல்லாம் தெரியுமா..?? இதோ மொத்த லிஸ்ட்…!!!!!!!

இந்திய சந்தையில் எஸ்.யூ.வி கள் மற்றும் எம்.பி.வி-க்கள் மிகவும் புகழ்பெற்றவையாக விளங்குகிறது. ஒரே நேரத்தில் ஆறு முதல் ஏழு பயணிகள் வரை வசதியாக ஏற்று செல்லும் திறன் காரணமாக இந்த எ.ம்.பி.வி க்களை அதிக வாடிக்கையாளர்கள் வாங்கி வருகின்றனர். ஆண்டுதோறும் வரும் புதிய கார்களை அதிக அளவில் வாங்கி ட்ரெண்டுக்கு தகுந்தாற்போல்  தங்களை மாற்றிக் கொண்டிருக்கின்றனர். தற்போது இந்தியாவில் 2022 -ஆம் ஆண்டு அதிகம் விற்பனையான டாப் 5 எம்.பி.வி கார்களை பற்றி இந்த தொகுப்பில் காண்போம்.

மாருதி சுசிகி எர்டிகா:

இந்தியாவில் தற்போது அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்று மாருதி சுசுகி எர்டிகா ஆகும். 2022 -ஆம் ஆண்டில் 1,21,541 யூனிட்கள் விற்கப்பட்டதால் எர்டிகா விற்பனையில் முன்னணியில் இருக்கிறது. இது 5 ஸ்பீடு MT மற்றும் 6 ஸ்பீடு AT உடன் இணைக்கப்பட்ட 99 bhp 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உடன் இருக்கும் இந்த கார் ரூ.8.35 லட்சம் முதல் ரூ.12.79 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது.

கியா கேரன்ஸ்:

இன்னோவாவை பின்னுக்கு  தள்ளி கியா கேரன்ஸ் இந்த வருடம் இந்தியாவில் அதிக விற்பனையாகி இரண்டாவது எம்.பி.வி ஆகியுள்ளது. இந்த வருடம் ஜனவரியில் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இந்த எம்.பி.வி யின் 59,561 யூனிட்டுகள் நாட்டில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் கியா கேரன்ஸ் 1.5 லிட்டர் பெட்ரோல் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் போன்ற வசதிகளுடன் வரும் இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.10 லட்சம் முதல் ரூ.18 லட்சம் வரை விற்பனையாகிறது.

டொயோட்டா இன்னோவா:

டொயோட்டா இன்னோவா எம்.பி.வி அனைவரின் விருப்பப்பட்டியலில் தற்போதும் பிரபலமாக வலம் வருகிறது. மேலும் இந்த ஆண்டில் இதுவரை இந்தியாவில் இந்த எம்பிவியின்56,533 யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.

மாருதி சுசுகிXL6:

இந்தியாவில் மிகவும் பிரபலமான எம்பிவியாக உள்ளது. 2022 -ஆம் ஆண்டில் இதுவரை 39 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்டிகள் விற்பனையாகியுள்ளது. மேலும் இது ஏர்டிகாவை போல் 5 ஸ்பீடு MT மற்றும் 6 ஸ்பீடு AT உடன் இணைக்கப்பட்ட அதே 99 bhp 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் வருகிறது.  மாருதி சுசுகிXL6 தற்போது ரூ.11.29 லட்சம் முதல் ரூ.14.55 லட்சம் வரை ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ரெனால்ட் ட்ரைபர்:

இந்தப் பட்டியலில் கடைசியாக உள்ள எம்.பி.வி ரெனால்ட் ட்ரைபர் ஹிடன் பிளஸ் பாயிண்ட் மலிவான விலை ஆகும். 2022 -ஆம் ஆண்டில் இதுவரை 31,751 ட்ரைபர் யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் 71bhp1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் வரும் இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.5.92 லட்சம் முதல் ரூ.8.51 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது.

Categories

Tech |