தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இன்று 82 பேர் இன்று ஒரே நாளில் குணமடைந்துள்ளது மக்களிடை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தினமும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. அதே வேளையில் நாடு முழுவதும் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வண்ணம் இருந்தன.
அந்த வகையில் அதிகம் பாதித்த பகுதியான மகராஷ்டிராவில் கொரோனாவுக்கு 3,320 பேர் பாதிக்கப்பட்டு 331 பேர் குணமடைந்தனர். அதற்கு அடுத்தபடியாக அதிகம் பாதிக்கப்பட்ட டெல்லியில் 1,707 பேருக்குகொரோனா உறுதி செய்யப்பட்டு 72 பேர் குணமடைந்துள்ளனர். இதற்கு முன்னதாக தமிழகமும், கேரளாவும் மகாராஷ்டிராவை மிஞ்சும் அளவுக்கு கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களாக இருந்து வந்தன. நாளாக நாளாக தமிழகத்திலும், கேரளாவிலும் கொரோனா கட்டுக்குள் வந்தது.
தமிழகத்திலும் இன்று ஒரே நாளில் மட்டும் 49 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1372 ஆக உயர்ந்தது. அதே போல இன்று ஒரே நாளில் மட்டும் 82 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் 365 பேர் குணமடைந்து கொரோனா பாதித்த அதிகமானோரை குணப்படுத்திய மாநிலமாக இருந்த மஹாராஷ்டிராவை பின்னுக்கு தள்ளி தமிழகம் முதலிடத்தை பெற்று அசதியுள்ளது.
தமிழகத்தில் கடந்த இரண்டு நாளில் மட்டும் (நேற்று 103 , இன்று 82) 185 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளது பிற மாநிலங்களையும் வியப்படைய வைத்துள்ளது. தமிழக அரசு சுகாதாரத்துறை, தமிழக அரசு கொரோனவை கட்டுப்படுத்த எடுத்துக்கொண்ட நடவடிக்கைதான் இதற்கு காரணம் என்றும் பலரும் தமிழக அரசைப் பாராட்டி இருக்கின்றனர்.