பொருளாதாரத்தை மேம்படுத்த தமிழக அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன் தலைமையில் 24 பேர் கொண்ட உயர்மட்டக்குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கிற்கு பின் தமிழக பொருளாதாரத்தை மீட்டெடுப்பது குறித்து ஆலோசனை வழங்க இந்த உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழு, ஊரடங்கிற்கு சிறு மற்றும் குறு தொழில்களில் ஏற்பட்டுள்ள தாக்கம் மற்றும் வாய்ப்புகளை அறிய செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சி.ரங்கராஜன் தமலையிலான குழு 3 மாதங்களுக்குள் பரிந்துரைகளை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில் பார்மசி செக்ரட்டரி என்.நாராயணன், துணை வேந்தர் பி.துரைசாமி, தமிழ்நாடு விவசாயத்துறை யூனியனின் துணை வேந்தர் குமார், மெட்ராஸ் ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸ் இயக்குனர் சண்முகம், மெட்ராஸ் இன்ஸ்டியூட் ஆப் டெவலப்மென்ட் இயக்குனர் பாபு உள்ளிட்டோர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 3 கட்டமாக 46வது நாளாக ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு தொடங்கியது முதல் அனைத்து தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிக வளாகங்கள் மூடப்பட்டன. இதன் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் பொருளாதாரம் மிகவும் பாதித்துள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் மே 4ம் தேதி முதல் சில ஊரடங்கு உத்தரவுகளை வெளியிட்டது. அதில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள், கடைகள் நிபந்தனைகளுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, மே 11ம் தேதி முதல் டீ கடைகள், பெட்ரோல் பங்குகள் தொழில் நிறுவனங்கள் ஆகியவை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பொருளாதாரத்தை மேம்படுத்த தமிழக அரசு உயர்மட்ட குழுவை உருவாகியுள்ளது.