கொரோனா பரவல் குறித்து கண்காணிக்க மத்திய அரசு உயர்மட்ட குழு ஒன்றை அமைத்துள்ளது.
இந்தியாவில் கொரோனா நோய் தொற்றால் பாதிப்புகளின் எண்ணிக்கை 2 லட்சத்து 56 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 85,975 பேரும், தமிழகத்தில் 31,667 பேரும், டெல்லியில் 27,654 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 50 மாவட்டங்களில் உயர்மட்ட குழு அமைத்து மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவிலே மஹாராஷ்டிரா,தமிழகத்தில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகம் மற்றும் மஹாராஷ்டிராவில் தலா 7 மாவட்டங்களில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மற்ற மாநிலங்களில் 36 மாவட்டங்களிலும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. பொது சுகாதார நிபுணர்கள், நோய் தொற்று தடுப்பு நிபுணர்கள், மருத்துவமனை அலுவலர்கள் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் அந்தந்த மாநில சுகாதாரத்துறை உள்ளிட்ட துறை அலுவலர்களுடன் சேர்ந்து பணியாற்றுவார்கள் என கூறப்பட்டுள்ளது.