உலக நாடுகளை அச்சுறுத்தும் கோரோனோ வைரசுக்கு 9 பேர் உயிரிழப்பு , 5 நாடுகளுக்கு வைரஸ் பரவியதால் உலக சுகாதார நிறுவனம் அவசர ஆலோசனை.
பெங்களூருவில் மர்மப் பொருள் வெடித்து சிதறியதால் பரபரப்பு , காங்கிரஸ் எம்எல்ஏ உட்பட பலர் படுகாயம் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு
24 ஆயிரம் கோடி மதிப்பிலான 9 திட்டங்களில் பணிகள் தாமதம் பிரகதி ஆய்வு கூட்டத்தில் பிரதமர் மோடி ஆலோசனை.
SSI வில்சன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் தொடரும் கைது படலம் , பண பரிவர்த்தனைக்கு உதவி செய்ததாக ராமநாதபுரத்தில் 3 பேர் கைது.
ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சித் திட்டங்களுக்காக 80 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அறிவிப்பு
சிவகாசி சிறுமி கொடூர கொலை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி சாலை மறியல் , 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்ததாக போலீசார் உறுதி.
வரிகளை கையாளும் சட்டங்களில் திருத்தம் கொண்டு வர திட்டம் , பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
அமித்ஷாவின் சவாலை ஏற்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் , பொது விவாதம் நடத்த தயார் என அகிலேஷ் யாதவ் , மாயாவதி அறிவிப்பு.
விண்ணில் செலுத்தப்படும் ஆளில்லாத விண்கலத்தின் பெண் ரோபோ பயணம் , ககன்யான் திட்டத்தின் முன்னோட்டம் குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்.
வெளிநாட்டினரின் என அறிவிக்கப்பட்டவர் குடியுரிமை கோரி விண்ணப்பிக்க முடியுமா ? மத்திய அரசு விளக்கம் அளிக்க மம்தா பனர்ஜி வலியுறுத்தல்.
சென்னை விமான நிலையத்தில் 2.6 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் , திருச்சியில் 85 லட்சம் மதிப்பிலான தங்கம் வெளிநாட்டு கரன்சிகள் சிக்கின.
முதலமைச்சர் பதவியை பன்னீர் செல்வத்திற்கு விட்டுத் தர தயாரா ? முதலமைச்சர் பழனிசாமிக்கு திமுக பொருளாளர் துரைமுருகன் கேள்வி.
செங்கல்பட்டு முதல் திருச்சி வரை 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னையையடுத்த படூரில் அடுத்தடுத்து இரண்டு ஏடிஎம்களில் கொள்ளை முயற்சி , சிசிடிவி காட்சி , கைரேகை நிபுணர்கள் உதவியுடன் மர்ம நபர்களுக்கு வலைவீச்சு.
டெல்டா மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு , குமரி , மன்னார் வளைகுடா பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமென அறிவுறுத்தல்.
தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் காலக்கெடு நிறைவேற்ற வேண்டும் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வலியுறுத்தல்