சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் முதல் 5 இடத்தை நடிகர் தனுஷின் ஹாஷ்டக்குகள் பிடித்துள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் அதிக ரசிகர்களை கொண்ட பட்டியலில் அஜித்,விஜய் போன்ற பெரிய நடிகர்களுக்கு அடுத்த நிலையில் நடிகர் தனுஷ் இருந்து வருகிறார். தனது அசாதாரணமான நடிப்புத் திறமையால் மிகச் சிறந்த நடிகனாக திகழ்ந்து வருவதோடு மட்டுமில்லாமல், சினிமா துறையில் பாடல் பாடுவது, பாடல் எழுதுவது, தயாரிப்பாளர், இயக்குனர் என இவர் கால் பதிக்காத பணிகளே இல்லை. மேலும் கால் பதித்த அனைத்திலும் அதீத வெற்றியும் பெற்றுள்ளார்.
இதையடுத்து ஜூலை 28 ஆம் தேதியான இன்று நடிகர் தனுஷ் அவர்களின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் தமிழகம் முழுவதும் வெகு விமர்சியாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் டிரெண்டிங்கில் முதல் 5 இடத்தை தனுஷின் ஹாஷ்டாக்குகள் இடம்பெற்று உள்ளன. குறிப்பாக D39 ஃபர்ஸ்ட் லுக் என்ற ஹாஷ்டாக் டிரண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.