யானைகளின் சிறப்பு குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
உலகில் பல்லாயிரக்கணக்கான எண்ணிக்கையில் யானைகள் இருந்தாலும் அவை அனைத்தும் இரண்டு வகையை மட்டுமே சேர்ந்தவை. ஒன்று ஆசிய யானைகள், மற்றொன்று ஆப்ரிக்கா யானைகள்.
இந்த உலகில் பல யானை வகைகள் இருந்தாலும், பெண் ஆசிய யானைகளுக்கு தந்தம் இருக்காது.
எடை என்பது அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானதாக இருந்தாலும், யானை பிறக்கும்போது சராசரியாக 200 பவுண்டுகள் எடை இருக்கும். இது 30 பிறந்த குழந்தைகளின் எடைக்கு சமமானது ஆகும்.
மனிதனுக்கு இருப்பதைப் போலவே யானைகளுக்கும் கண் இமைகள் உள்ளன.
ஆப்பிரிக்கா யானைகள்தான் நிலத்தில் வாழும் மிகப்பெரிய விலங்கு. டைனோசர் அழிவுக்குப் பின் யானைகள்தான் இப்போது நிலத்தில் வாழும் விலங்குகளில் பிரமாண்டமானவை.
மனிதனுக்கு எப்படி தன் வாழ்வில் ஒரு எதிரி இருப்பானோ, அதே போல்தான் யானைக்கும் இருக்கிறது. யானைக்கு பிடிக்காத ஒரு உயிரினம் தேனீ.
மனிதனின் மொத்த உடலில் உள்ள சதையை விட, யானையின் தும்பிக்கையில் அதிக சதை உள்ளது.
யானைகள் 22 மாதங்கள் கர்பமாக இருந்து குட்டியை ஈன்றெடுக்கும் என்பது தான் மிகவும் சுவாரசியமான விஷயமாக கருதப்படுகிறது.
மனிதர்களுக்கு கைகள் எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு யானைக்கு தந்தம் மிகவும் முக்கியமாகிறது. யானையின் தந்தம் ஒரு முறை உடைந்தால் மீண்டும் வளராது.
பொதுவாக மனிதர்கள் வலதுகை பழக்கம் உடையவர்களாக இருந்தாலும், இடது கை பழக்கம் உடையவர்கள் இருக்கிறார்கள் தானே. அதுபோல யானைகளையும் நாம் அடையாளப்படுத்தலாம். அதாவது, எந்த பக்க தந்தத்தை அதிகம் பயன்படுத்துகிறது என்பதை பொறுத்து அதனை அடையாளப்படுத்த முடியும்.