Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மதிப்பெண்ணில் முதலிடம்….. ஒருநாள் தலைமையாசிரியரான +2 மாணவி…. குவியும் பாராட்டு….!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அரசு பள்ளியில் ஒருநாள் தலைமையாசிரியரான  மாணவிக்கு பாராட்டுகள் குவிகின்றன.

திருவண்ணாமலை  மாவட்டம் ஆரணி அரசு உயர்நிலைப்பள்ளி பள்ளியில் நடைபெற்ற அரையாண்டுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்  ஒருவருக்கு ஒரு நாள் மட்டும் தனது தலைமைப் பொறுப்பை தருவதாக அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் கூறியிருந்தார்.

இந்த நிலையில் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவி மதுமிதா அவருக்கு ஒருநாள் தலைமையாசிரியராக வாய்ப்பு கிடைத்துள்ளது. 154 மாணவர்களும் 19 ஆசிரியர்களும் உள்ள பள்ளியில் ஒய்யார நடை நடந்து தலைமையாசிரியர் இருக்கையில் அமர்ந்து பனி செய்த மாணவி மதுவிற்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளன.

Categories

Tech |