Categories
மாநில செய்திகள்

மணிக்கு 30-40 கி.மீ வரை சூறைக்காற்று வீசும் – மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என எச்சரிக்கை!

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. கோவை, நீலகிரி, ராமநாதபுரம், விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டையில் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பலத்த காற்று, இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மணிக்கு 30-40 கி,மீ, வரை சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல், லட்சத்தீவு, மாலத்தீவு ஆகிய கடல்பகுதிக்கு மீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலுக்கு செல்லவேண்டாம் என கூறப்பட்டுள்ளது.

மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், சேலம், தருமபுரி, திருத்தணியில் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும். காலை 11.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை வெளியில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. அரியனேந்தல், வேந்தோணி, பொட்டித்தட்டி, வாகைக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

Categories

Tech |