முறுக்கு, சீடை, வடை போன்றவற்றில் எள்ளு சேர்ப்பதன் மருத்துவ ரகசியம் என்ன என்பது ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
பண்டைய காலத்தில் முன்னோர்கள் ஒவ்வொரு பொருளிலும் முக்கியமாக முறுக்கு, சீடை, வடை, எள்ளுருண்டை ஆகியவற்றில் கருப்பு எள்ளை சேர்த்து செய்வார்கள். இதற்கு மருத்துவ குணம் ஒன்று உள்ளது. ஒரு பிடி எள்ளு நம்மை நோய் நொடி இன்றி வாழ வைக்குமாம். அப்படி என்ன சத்துக்கள் இதில் இருக்கின்றது என்றால், ஆன்டிஆக்சிடென்ட், ஒமேகா-3 கொழுப்பு, அமிலங்கள், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் ஏ அனைத்து சத்துக்களும் உள்ளன.
அன்றாட உணவில் எடுத்துக் கொண்டால் செரிமான சக்தி அதிகரிக்கும். கல்லீரலில் உள்ள நச்சுக்களை சுத்தம் செய்து உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி இரத்தத்தை சுத்தமாக்கும். மூளை செல்களை மறுஉற்பத்தி செய்யும். இதனை ஆய்வு செய்த தாய்லாந்து மருத்துவக் குழுவும் கருப்பு எள்ளில் முக்கிய மூலப்பொருளான செசாமின், புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கும் சக்தியைக் கொண்டு உள்ளதாக தெரிவித்துள்ளது.
செசாமின் என்ற வேதிப்பொருள் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டி புற்றுநோய் வராமல் தடுக்கின்றது. தினமும் ஆண் பெண் என இருபாலரும் புற்றுநோயால் அவதிப்பட்டு வருகின்றனர். புற்றுநோய் பெரும்பாலும் ஆரம்பத்தில் தெரிவதில்லை. நோய் முற்றிய பிறகுதான் நமக்கு தெரியவரும். இதனால் எள்ளின் மகத்துவம் அறிந்து, இன்றிலிருந்தே உங்கள் உணவில் ஒரு பொருளாக சேர்த்து ஆரோக்கியமாக வாழுங்கள்.