Categories
உலக செய்திகள்

கொரானா பீதியில் மனைவிக்கு நிகழ்ந்த கொடூரம்..! விளையாட்டு வினையான சம்பவம்.!!

கொரோனா வைரஸ் அச்சத்தால்  தனது மனைவியை குளியலறையில் கணவர் அடைத்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் தோற்று இருக்கக்கூடும் என்ற பயத்தில் லிதுவேனியாவில் தனது சொந்த மனைவியை கணவரும், அவரின் இரு மகன்களும் இணைந்து குளியறையில் அடைத்து பூட்டி வைத்துள்ளனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், அவர்களிமிருந்து அப்பெண்ணை காப்பாற்றினர்.

இதுகுறித்து விசாரணையில், கடந்த சில நாட்களுக்கு முன் அந்த பெண் விமானத்தில் வந்த போது வெளிநாட்டு நபருடன் பேசிக்கொண்டு வந்ததாகவும் ஆகையால்  தனக்கு கொரோனா வைரஸ் பரவியிருக்கு வாய்ப்பு உள்ளது என விளையாட்டாக கூறியுள்ளார். இதை கேட்டுவுடன், பயந்த கணவரும், இரண்டு மகன்களும் தாயாரை குளியலறைக்கு உள்ளே தள்ளிவிட்டு கதவை தாழ்ப்பால் போட்டு பூட்டியது தெரியவந்தது.

இதை தொடர்ந்து, காவல் துறையினர் அப்பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து சென்று ஆய்வு மேற்கொண்டனர். அதில், அப்பெண்ணிற்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதியானது.

Categories

Tech |