சீமானின் சர்சை கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அங்கு பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர், ”முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியைக் கொன்றது சரிதான். ஒருகாலம் வரும். அப்போது வரலாறு திருப்பி எழுதப்படும். என் இன மக்களைக் கொன்று குவித்த ராஜிவ் காந்தி என்ற எதிரியை தமிழர் தாய் நிலத்தில் கொன்று புதைத்தோம் என்ற வரலாறு வரும்” என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.சீமானின் இந்தக் கருத்துக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் பலரும் எதிர்ப்புத் தெரிவித்துவந்த நிலையில் ஆங்காங்கே போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சீமானின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தென் சென்னை இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் கோடம்பாக்கத்தில் போராட்டம் நடத்தினர் . அதிக போக்குவரத்து நெருக்கமான பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்திய அவர்கள் சீமானின் புகைப்படம் மற்றும் ஆமையின் புகைப்படத்தை அடித்தும் , சீமானுக்கு எதிராக முழக்கம் எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அந்த சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட முயன்ற 40_க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.